புதுடெல்லி: கடல்சார் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய நோக்கம் கடல் சார்ந்த நடவடிக்கைகளில் வேலை வாய்ப்பையும், உணவு பெருக்கத்தையும் உருவாக்குதல் ஆகும். இதன் மறுகூறாக, மீன்பிடித்தல், சுற்றுலா மற்றும் கடல் வணிகம், கப்பல் போக்குவரத்து ஆகிய நடவடிக்கைகள் உள்ளன. இவற்றை வளர்ப்பதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகுகிறது என சென்னை ஐஐடி பேராசிரியர் கே.முரளி விளக்கமளித்திருக்கிறார். அதன் விவரம்:
கடல்சார் பொருளாதாரம் என்பது ஒரு புதிய சொல்லோ அல்லது கொள்கையோ அல்ல. நம்முடைய வாழ்வில் ஏற்கனவே வெவ்வேறு வழிகளில், கடல்சார் பொருளாதாரத்தை அடைந்து கொண்டு இருக்கின்றோம். இருப்பினும், பலதரப்பட்ட நாடுகளும் இன்று கடல்சார் பொருளாதாரத்தில் நாட்டம் கொண்டுள்ளன. முக்கியமாக சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பதற்காகவும், கடல்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும், வளர்ப்பதற்காகவும் முதலீடுகளை செய்து வருகின்றன.
கடல்சார் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய நோக்கம் கடல் சார்ந்த நடவடிக்கைகளில் வேலை வாய்ப்பையும், உணவு பெருக்கத்தையும் உருவாக்குதல், இதன் மறுக்கூறாக, மீன்பிடித்தல், சுற்றுலா மற்றும் கடல் வணிகம், கப்பல் போக்குவரத்து ஆகிய நடவடிக்கைகளை உள்ளன. இவற்றை வளர்ப்பதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகுகிறது. கடல் அடிப்படையில் சாகுபடி செய்யும் உணவுப் பொருட்களை வளர்ப்பதால் கடல் வழி மற்றும் கடல் வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு முக்கிய பங்கு வகிக்கின்றது.
அதற்காக அரசுகள் மீன்பிடிப்பதில் கட்டுப்பாடுகளை வருடத்தில் 45 முதல் 60 நாட்கள் வரை நிலைநாட்டி வருகின்றன. இதன் மற்றொரு கூறாக பசுமை ஆற்றல் (Green & Clean Energy) உள்ளது. இதில் மிதக்கும் காற்றாலை மின் உற்பத்தியும் மிதக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தியும் முக்கிய கூறுகளாக உள்ளன.
» பல்லுயிர், பவளப்பாறைகளை பாதுகாக்க கடல்சார் உயர் இலக்கு படை: வனத்துறை அமைச்சர் தொடங்கிவைத்தார்
» தமிழகத்தில் முதலீடு செய்ய சாதகமான சூழல்: கடல்சார் உச்சி மாநாட்டில் அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு
நம்முடைய இந்திய அரசு இதற்காக புதிய கொள்கைகளையும் சட்டங்களையும் வகுத்து வருகின்றது. கடல் பொருளாதாரத்தின்(Blue Economy) முக்கிய கூறாக பசுமை கப்பல் போக்குவரத்தும், பசுமைக் கப்பல் கட்டுதலும் உள்ளன. நம்முடைய மற்றும் உலகளாவிய பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் இதற்காக சூரிய ஒளி மற்றும் காற்று ஆற்றலில் இயங்கும் கப்பல்களை வடிவமைத்தும், தானியங்கியாக இயங்கும் கப்பல்களை வடிவமைத்தும் வருகின்றனர்.
இதில் ஐரோப்பிய நாடுகளில் பங்கு முதன்மையாக உள்ளது. இருப்பினும், இந்திய பல்கலைக்கழகங்களும், ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களும் வெகுவாக முன்னேறியுள்ளன. கடல் சார்ந்த பொருளாதாரத்தை மற்றொரு முக்கிய கூறாக அனைவரும் உள்ளடங்கும் வகையில் கொள்கைகளும், முதலீடுகளும், அனைவரின் வாழ்வாதாரங்களையும், பெருக்கும் வகையில் தொகுக்கப்படுகின்றன.
சர்வதேச ஆராய்ச்சிகளில் பிளாஸ்டிக் மாசு, கடல் வாழ் உயிரினங்களில் காணப்படுவதாகவும் அறியப்பட்டுள்ளது. அதை தடுப்பதற்காக வெகுவாக முயற்சிகளை மேற்கொள்ளப்படுகிறது. இதன் முக்கிய பகுதியாக நாம் எங்கு வாழ்ந்தாலும் பிளாஸ்டிக் குப்பைகள் கடைசியாக கடலை அடைகின்றன என்பதை உணர வேண்டியது அவசியமாகும்.
நாம் அனைவரும் குப்பைகளை குறைப்பதன் மூலமும் சுழற்சி முறையில் உபயோகிப்பது மூலமும் இதை சரி செய்ய முடியும். கடல்சார் பொருளாதாரமே நம் சந்ததிகளின் எதிர்காலமாகும் என்பதை உணர வேண்டும்.
முக்கிய செய்திகள்
வணிகம்
10 hours ago
வணிகம்
10 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago