‘எக்ஸ் தளத்தில் புதிய பயனர்கள் பதிவிட கட்டணம் செலுத்த வேண்டும்’ - மஸ்க் பலே திட்டம்

By செய்திப்பிரிவு

சான் பிரான்சிஸ்கோ: எக்ஸ் சமூக வலைதளத்தில் புதிதாக இணையும் பயனர்கள், அந்த தளத்தில் பதிவிட (ட்வீட் செய்ய) கட்டணம் செலுத்தும் புதிய நடைமுறையை பரிந்துரைத்துள்ளார் எலான் மஸ்க். இதன் மூலம் எக்ஸ் தளத்தில் பாட்களின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என அவர் உறுதியாக நம்புகிறார்.

கடந்த 2022-ம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கி இருந்தார். ட்விட்டரின் பெயரை எக்ஸ் என மாற்றினார். அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை தன் விருப்பத்துக்கு ஏற்ப அவர் மேற்கொண்டு வருகிறார். ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்தார்.

குறிப்பிட்ட சில அம்சங்களை பயன்படுத்த பயனர்களிடத்தில் சந்தா கட்டணம் வசூலிக்கும் வழக்கத்தை கொண்டு வந்தார். இந்தச் சூழலில் எக்ஸ் தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள், அதில் பதிவிட கட்டணம் வசூலிக்கப்படும் என இப்போது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பல்வேறு ட்வீட்களில் விரிவாக குறிப்பிட்டுள்ளார். அதில் பாட்களின் இடர்களை நீக்கவே இந்த ஏற்பாடு என சொல்லியுள்ளார். அதன் காரணமாக எக்ஸ் தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள் குறைந்தபட்ச கட்டணத்தை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். ஏனெனில், சில நேரங்களில் CAPTCHA போன்ற முறைகள் பலன் அளிப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மஸ்கின் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் எக்ஸ் தளத்தில் பயனர்கள் புதிதாக கணக்கு தொடங்க முடியும். ஆனால், அதில் எந்த வகையிலும் இண்டிரெக்ட் செய்ய முடியாது. கட்டணம் செலுத்தினால் மட்டுமே பதிவிட முடியும். இந்த கட்டண வசூல் நடைமுறை பயனர்கள் கணக்கு தொடங்கிய முதல் மூன்று காலம் வரை இருக்கும் என தகவல்.

இதே மாதிரியான கட்டண நடைமுறை நியூஸிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் நீலக்குறி பெறாத பயனர்களிடத்தில் ஆண்டு சந்தாவாக 1 டாலர் வீதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அது சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி.

இருப்பினும் புதிய பயனர்கள் பதிவிடுவதற்கான கட்டண வசூல் நடைமுறை எப்போது அமலுக்கு வரும்? அதற்கான கட்டணம் குறித்த விவரம் போன்றவை வெளியாகவில்லை. இப்போதைக்கு இது திட்டமிடும் நிலையில் இருப்பதே அதற்கு காரணம் என அறியப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

4 hours ago

வணிகம்

4 hours ago

வணிகம்

4 hours ago

வணிகம்

8 hours ago

வணிகம்

13 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்