புதுடெல்லி: பால், தானியங்கள், மால்ட் அடிப்படையிலான பானங்களுக்கு ஆரோக்கிய பானங்கள் அல்லது ஆற்றல் பானங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கடந்த 2-ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்நியைலில், மத்திய வணிக மற்றும் தொழில் துறை செயலாளர் ராஜேஷ் ரஞ்சன் கடந்த 10-ம் தேதி வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:
இ-காமர்ஸ் தளங்களில் போர்ன்விட்டா உள்ளிட்ட பானங்கள் ஆரோக்கிய பானம் என்ற பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டிருந்தது. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கையின்படி, இந்திய உணவு சட்டங்களில் ஆரோக்கிய பானம் குறித்து தெளிவான வரையறை இல்லை.
எனவே அனைத்து இ-காமர்ஸ் நிறுவனங்களும் தங்களது இணைய தளங்களின் ஆரோக்கிய பானம் பட்டியலில் இருந்து போர்ன்விட்டா உள்ளிட்ட பானங்களின் பெயர்களை நீக்க வேண்டும். இவ்வாறு ராஜேஷ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
9 days ago