சென்னை: தங்கம் விலை ஒரு கிராம் ரூ.6705 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.53,640-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.
அன்று ரூ.43,000; இன்று ரூ.53,000-ஐ கடந்து செல்லும் தங்கம்.. கடந்த 2022 டிசம்பர் 26-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.43,040-க்கு விற்கப்பட்டது. இது அப்போது அதிகபட்ச உயர்வாக கருதப்பட்டது. ஆனால்,பிறகு தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தது.
கடந்த 2023 பிப்ரவரியில் ஒரு பவுன்ரூ.44 ஆயிரம், மார்ச்சில் ரூ.45 ஆயிரம், ஜூனில் ரூ.46 ஆயிரம், டிசம்பரில் ரூ.47 ஆயிரம் என விலை படிப்படியாக உயர்ந்து வந்தது.
» பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் சிஇஓ சுரீந்தர் சாவ்லா ராஜினாமா
» இந்தியாவில் ஊழியர்களுக்காக 78,000 வீடுகளை கட்டும் ஆப்பிள் நிறுவனம்
2024-ல் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. கடந்த பிப்ரவரியில் ஒரு பவுன் ரூ.48 ஆயிரம், கடந்த மார்ச் 9-ம் தேதி ரூ.49 ஆயிரம், மார்ச் 28-ம் தேதி ரூ.50 ஆயிரம், 29-ம் தேதி ரூ.51 ஆயிரம், கடந்த 3-ம் தேதி ரூ.52 ஆயிரம் என வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து, புதிய உச்சங்களை எட்டியது. ஏப்ரல் 8 ஆம் தேதி ஒரு கிராம் ரூ.6,660-க்கும், ஒரு பவுன் ரூ.53,280-க்கும் விற்பனையானது.
ஒரு பவுன் ரூ.53,640: இந்நிலையில் இன்று (ஏப்ர, 10) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.35 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.6705-க்கும், ஒரு பவுன் ரூ.53,640-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து ரூ.89-க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7000-ஐ நெருங்கிவருவதால் சுப நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்க திட்டமிட்டுள்ளோர் கவலை அடைந்துள்ளனர். ஏற்கெனவே 24 காரட் சுத்த தங்கம் ஒரு கிராம் ரூ.7000-ஐ கடந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வணிகம்
7 hours ago
வணிகம்
7 hours ago
வணிகம்
8 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago