1,000% லாபம் ஈட்டலாம் என்று விளம்பரம்: நிதி ஆலோசகர் ரூ.12 கோடியை திருப்பி செலுத்த செபி உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பங்குச் சந்தை முதலீடு தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு வரும் பிரபலஇன்ப்ளூயன்சர் ரவீந்திர பாலுபார்தி. இவரை சமூக வலைதளங் களில் 20 லட்சம் பேர் பின்தொடர் கின்றனர்.

இவர் தன் மனைவியுடன் இணைந்து ரவீந்திர பார்தி கல்விநிலையம் என்ற பெயரில் நிறுவனம்ஒன்றை 2016-ம் ஆண்டு தொடங்கினார். அதன் மூலம், பங்குச் சந்தைமுதலீடு தொடர்பாக பயிற்றுவித்து வந்துள்ளார். தன்னிடம் வந்து பயின்றால், பங்குச் சந்தையில் 1,000 சதவீதம் வரையில் லாபம் பார்க்க முடியும் என்று விளம்பரம் செய்துள்ளார். இதை நம்பி பலரும் அவரிடம் பயின்றுள்ளனர்.

இந்நிலையில், அவர் பொய்யான வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றுகிறார் என்று கூறி,இதன் மூலம் பெற்ற ரூ.12 கோடியை செலுத்தும்படி பங்குச் சந்தை ஒழுங்குறை வாரியமான செபி உத்தரவிட்டுள்ளது.

மேலும், அந்நிறுவனம் முதலீட்டு ஆலோசனை வழங்குவதற்கும், பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடவும் செபி தடை விதித்துள்ளது. இதுகுறித்து செபி கூறுகையில், “பங்குச் சந்தையில் முதலீடுசெய்பவர்களின் நம்பிக்கையைக்காப்பாற்றுவது அவசியம்” என்றுதெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

4 hours ago

வணிகம்

5 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

10 hours ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

மேலும்