புதிய பிரிவுகளில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: நிறுவனங்களிடம் கருத்து கேட்கிறது டிராய்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), 5ஜி அலைக்கற்றையின் புதிய ஏலம் தொடர்பாக துறை சார்ந்த நிறுவனங்களிடம் கருத்து கேட்டுள்ளது.

அதன்படி, 37 - 37.5 ஜிகாஹெட்ஸ், 37.5 - 40 ஜிகாஹெட்ஸ், 42.5 - 43.5 ஜிகாஹெட்ஸ் ஆகிய மூன்று பிரிவுகளை ஏலத்துக்கு விட முன்மொழியப்பட்டுள்ளது. இதன் வழியே மொத்த 5ஜி அலைக்கற்றை 4,000 மெகாஹெட்ஸ் ஆக உயரும் என்று தெரிகிறது.

இந்த அலைக்கற்றை பிரிவுகளுக்கான விலை, பயன்பாட்டு கால அளவு உள்ளிட்டவை குறித்துஅத்துறைசார் நிறுவனங்களின் கருத்தை டிராய் கோரியுள்ளது.குறிப்பாக, தற்போது 5ஜி அலைக்கற்றை 20 ஆண்டு காலத்துக்கு ஏலம்விடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் புதிய மூன்று பிரிவுகளையும் 20 ஆண்டுகால அடிப்படையில் ஏலம்விடுவதா அல்லது குறுகியகால அடிப்படையில் ஏலம் விடுவதா என்பது குறித்து கருத்து கேட்டுள்ளது.

இதில், 37-37.5 ஜிகாஹெட்ஸ் மொபைல் சேவைக்கும், 37.5 - 40 ஜிகாஹெட்ஸ் மற்றும் 42.5 - 43.5 ஜிகாஹெட்ஸ் பிரிவானதுமொபைல் மற்றும் செயற்கைகோள் தொடர்பான சேவைகளுக்கும் பயன்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனங்கள் தங்கள் கருத்துகளை மே 2-ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு டிராய் கேட்டுக்கொண்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE