புதுடெல்லி: உலகளாவிய பில்லியனர்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. 100 கோடி டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.8,300 கோடி) மேல், சொத்து மதிப்பு கொண்டிருப்பவர்கள் பில்லியனர்கள் என்று வரையறுக்கப்படுகின்றனர்.
கடந்த மார்ச் மாத நிலவரப்படி, உலக அளவில் 2,781 பில்லியனர்கள் உள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு 14.2 லட்சம் கோடி டாலர் ஆகும். இந்தியாவில் மட்டும் 200 பில்லியனர்கள் உள்ளனர். சென்ற ஆண்டில் அந்த எண்ணிக்கை 169 ஆக இருந்தது.
போர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்திய பில்லியனர்கள் வரிசையில், 116 பில்லியன் டாலர் (ரூ.9.62 லட்சம் கோடி) சொத்து மதிப்பைக் கொண்டு முகேஷ் அம்பானி முதல் இடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் கவுதம் அதானி (ரூ.6.97 லட்சம் கோடி), 3-வது இடத்தில் ஷிவ் நாடார் (ரூ.3.07 லட்சம் கோடி), 4-வது இடத்தில் சாவித்ரி ஜிண்டால் (ரூ.2.78 லட்சம் கோடி), 5-வது இடத்தில் திலிப் ஷங்வி (ரூ.2.2 லட்சம் கோடி) உள்ளனர்.
உலக அளவில்: உலகளாவிய பில்லியனர்கள் வரிசையில், லூயி உட்டான் நிறுவனத்தின் பெர்னார்ட் அர்னால்ட் முதல் இடத்தில் உள்ளார். அவரது சொத்த மதிப்பு 233 பில்லியன் டாலராக (ரூ.19.33 லட்சம் கோடி) உள்ளது.
2-வது இடத்தில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் (ரூ.16.18 லட்சம் கோடி), 3-வது இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் (ரூ.16.10 லட்சம் கோடி) உள்ளனர். உலகளாவிய பட்டியலில் முகேஷ் அம்பானி 9-வது இடத்திலும், கவுதம் அதானி 17-வது இடத்திலும் உள்ளனர்.
பில்லியனர்கள் அதிகம் உள்ள நாடுகளின் வரிசையில் முதல் இடத்தில் அமெரிக்கா (813 பில்லியனர்கள்), 2-வது இடத்தில் சீனா (473 பில்லியனர்கள்), 3-வது இடத்தில் இந்தியா (200 பில்லியனர்கள்) உள்ளன என்று போர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
19 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago