புதுடெல்லி: இந்த ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7.5 சதவீதமாக உயரும் என உலக வங்கி கணித்துள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து உலக வங்கி அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தொழில்துறை மற்றும் சேவைகள் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட மீட்சி நடவடிக்கை மூலம் 2024-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும். ஆனாலும், 2025-ம் நிதியாண்டில் குறிப்பிட்ட காலத்துக்கு வளர்ச்சி 6.6 சதவீதம் என்ற அளவில் மிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மந்தநிலைக்கு முந்தைய ஆண்டில் முதலீட்டில் ஏற்பட்ட சரிவு காரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
குறிப்பிட்ட காலத்துக்குள் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை மற்றும் அரசு கடன் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ச்சி மற்றும் மத்திய அரசின் ஒருங்கிணைந்த முயற்சி ஆகியவற்றால் நிதி பற்றாக்குறை, அரசு கடன் ஆகியவை குறை யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய செயல்பாடு: 2023-ம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் நாட்டின் பொருளாதார செயல்பாடுகள் எதிர்பார்ப்பை மிஞ்சி 8.4 சதவீத வளர்ச்சி அடைந்தது. இதற்கு முதலீடு மற்றும் அரசின் நுகர்வு அதிகரித்தது காரணம்.
» நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம்: மொய்த்ரா, ஹிராநந்தானி மீது அமலாக்கத் துறை வழக்கு
தெற்கு ஆசியாவில் வளர்ச்சி: 2024-ம் ஆண்டில் தெற்கு ஆசியாவின் வளர்ச்சி 6 சதவீத மாக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. இதற்கு இந்தியாவின் வலுவான செயல்பாடு, பாகிஸ்தான் மற்றும் இலங்கையின் பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள மீட்சி காரணம் என கூறப்படுகிறது.
அடுத்த 2 ஆண்டுகளில், உலகஅளவில் வேகமாக வளர்ச்சியடையும் பகுதி தெற்கு ஆசியாவாக இருக்கும். இங்கு 2025-ம் ஆண்டில் வளர்ச்சி வீதம் 6.1 சதவீதமாக இருக்கும். 2025-ம் ஆண்டில் வங்கதேசத்தின் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேகாலத்தில் பாகிஸ்தானின் பொருளாதாரம் 2.3 சதவீதம் அதிகரிக்கும். இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2.5 சதவீதமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
9 days ago