இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் வாடிக்கையாளர்கள் விரும்பும் சிலிண்டரை வாங்கும் வசதி

By செய்திப்பிரிவு

சென்னை: வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் சிலிண்டரை தேர்வு செய்து வாங்கும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியன் ஆயில் நிறுவனம் ‘இண்டேன்’ என்ற பெயரில் வீடுகளுக்கு 14.20 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களையும், 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டரையும் விநியோகம் செய்து வருகிறது.

இவைதவிர, நகர்ப்புற வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கருதி 10 மற்றும் 5 கிலோ எடை கொண்ட ‘காம்போசிட்’ என்ற சிறிய ரக சிலிண்டர்களையும் விநியோகம் செய்து வருகிறது. இந்த சிலிண்டர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் விநியோகதஸ்கர்களிடம் அனைத்து வகை சிலிண்டர்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை வாடிக்கையாளர்கள், தங்களுடைய விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்து வாங்கிக் கொள்ளலாம்.

வாடிக்கையாளர்கள் தேர்வு செய்த சிலிண்டர் வகைகளை எந்நேரமும் இருப்பு இருப்பதை உறுதி செய்கிறோம். வாடிக்கையாளர்கள் சிலிண்டர் விநியோகத்தில் ஏதேனும் குறை இருந்தால், எங்களின் குறைதீர்க்கும் வழிமுறைகளைப் பயன்படுத்திதீர்வு காணலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

13 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

9 days ago

மேலும்