தமிழகத்தின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 7.4 பில்லியன் டாலராக உயர்வு: முதல்வர் பெருமிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "2021-ல் 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, திராவிட மாடல் அரசில் இப்போது 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது. கூடுதல் தகவல்… இது மத்திய அரசின் புள்ளிவிவரம்.

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செல்போன் ஏற்றுமதியில் முன்னணியில் நின்று, நாட்டின் ஏற்றுமதியில் 30% பங்கு வகிக்கும் நாம், நம் இலக்குகளை நோக்கி விரைந்து நடைபோடுவோம்!" என்று தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு பொருட்கள் ஏற்றுமதி ரூ. 21000 கோடி: முன்னதாக, இந்திய வரலாற்றில் முதன்முறையாக பாதுகாப்பு பொருட்கள் ஏற்றுமதி ரூ.21000 கோடியை தாண்டியுள்ளது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள பதிவில், "பாதுகாப்பு பொருட்கள் ஏற்றுமதி இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. முதன்முறையாக 21,000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்தியாவின் பாதுகாப்பு பொருட்கள் ஏற்றுமதி 2023-24 நிதியாண்டில் ரூ.21,083 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 32.5% அதிகம்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

12 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்