தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

By செய்திப்பிரிவு

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. சமீபகாலமாக தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தங்கம் விலை இன்று (மார்ச் 28) மேலும் அதிகரித்தது. சென்னையில் இன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.35 அதிகரித்து ரூ.6,280-க்கும், பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கும் விற்பனையாகிறது.

24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை பவுன் ரூ.54,544-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.80,500 ஆக உள்ளது.

காரணம் என்ன? சர்வதேச பொருளாதாரத்தின் நிலையற்ற தன்மையால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ள நிலையில் தங்கம் விலை அதிகரித்து வருகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இனி வருங்காலங்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும். வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தைத் தொடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

வணிகம்

4 hours ago

வணிகம்

7 hours ago

வணிகம்

12 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்