சென்னை: மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் சார்பில், ஏற்றுமதி ஸ்டார்ட்-அப் நிறுவனம் தொடங்குவது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை, கிண்டியில் உள்ள மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் சார்பில், ஏற்றுமதி ஸ்டார்ட்-அப் நிறுவனம் தொடங்குவது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
வரும் ஏப்.6 மற்றும் 7-ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இப்பயிற்சி வகுப்பு நடைபெறும். ஏற்றுமதிக்கு வாய்ப்புள்ள பொருட்களை கண்டறிதல், உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்புள்ள நாடுகள் எவை, இறக்குமதியாளர்களை எவ்வாறு கண்டறிவது, ஏற்றுமதி குறித்த தகவல்களை எவ்வாறு சேகரிப்பது, ஏற்றுமதியாளர்களுக்கு அரசாங்கம் வழங்கும் சலுகைகள், ஏற்றுமதி வர்த்தகத்தை எவ்வாறு தொடங்குவது மற்றும் பதிவு செய்வது குறித்த பல்வேறு விஷயங்கள் இப்பயிற்சி வகுப்பில் கற்றுத் தரப்படும்.
இந்திய அரசு சான்றிதழ்: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர், ஏற்றுமதி செய்ய விரும்பும் தொழில் முனைவோர், ஏற்றுமதி மார்க்கெட்டிங் மேலாளர்கள், டாக்குமென்டேஷன் எக்சிகியூடிவ்கள், எம்பிஏ பட்டதாரிகள், எம்.காம் மற்றும் பி.காம் பட்டதாரிகள் ஆகியோருக்கு இப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 25 இடங்களே உள்ளதால் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சிக் கட்டணம் ரூ.4,200. பயிற்சியின் முடிவில் இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு 91504 95272, 94442 45180, 044-22501529 ஆகியஎண்களில் தொடர்பு கொண்டு அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
» விபத்தில் ஊனமுற்ற மும்பை காவலருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு
» வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
முக்கிய செய்திகள்
வணிகம்
12 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
13 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago