இந்திய பெண் பட்டய கணக்காளர்களின் எண்ணிக்கை 30 சதவீதமாக வளர்ச்சி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்ததையடுத்து கடந்த ஆண்டு இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் புதிய பாடப்பிரிவை அறிமுகம் செய்தது. இதன் மூலம் பட்டய கணக்காளர் தேர்வை எழுதக் கூடிய மாணவிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

நடப்பாண்டில் பட்டய கணக்கியல் தேர்வை எதிர்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 43 சதவீதத்தினர் மாணவிகள். இத்தேர்வெழுதிய பெண்களில் 48 சதவீதத்தினர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் கடந்த 2000-ம் ஆண்டில் 8 சதவீதமாக இருந்த இந்தியப் பெண் பட்டய கணக்காளர்களின் எண்ணிக்கை 2024-ம் ஆண்டில் 30 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இதுபற்றி இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத் தலைவர் ரஞ்சித் குமார் அகர்வால் கூறியதாவது:

சமீப காலமாக, கணக்கியல், வரி, நிதி சார்ந்த துறைகளில் பெண்களின் பங்கேற்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல நாடுகள் கணக்கியலுக்காக இந்தியாவை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணத்துக்கு, அமெரிக்காவிலோ, பிரிட்டனிலோ ஒரு பர்கர் விற்பனை செய்யப்பட்டால் அதற்கான வரவு, செலவு கணக்கை சரிபார்ப்பவர்கள் குர்கானிலோ, கொல்கத்தாவிலோ இருக்கிறார்கள். அதிலும் பட்டய கணக்காளர்களுக்கு சராசரி ஆண்டு வருமானம் ரூ. 12.5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை எங்கள் வளாக தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அதிகபட்சம் ரூ.28 லட்சம் வரை ஆண்டு வருமானத்துக்கான வேலை இந்தியாவில் கிடைத்தது. அதிலும் சர்வதேச அளவில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ. 49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. ஐந்தாண்டு பட்டய கணக்கியல் படிப்புக்கு ரூ.75, 000 மட்டும் செலவழித்தால் கை மேல் பலன் கிடைக்கிறது இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

11 days ago

வணிகம்

11 days ago

மேலும்