பெங்களூரு: பெங்களூருவில் எம்டிஆர் நிறுவனத்தின் சமையல் கலைஞர்கள் 75 பேர் சேர்ந்து 123 அடி நீளமான தோசை சுட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
நம்முடைய உணவு முறையில் தோசைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு உண்டு. தென்னிந்தியாவைக் கடந்து உலகின் பல பகுதிகளிலும் தோசை விரும்பி உண்ணப்படுகிறது. தோசை பிரியர்களை கவரும் வகையில் விதவிதமான தோசைகள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன.
இந்நிலையில், எம்டிஆர் நிறுவனத்தின் சமையல் கலைஞர்கள் 75 பேர் சேர்ந்து 123 அடி நீளமான தோசை சுட்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து அந்த நிறுவனத்தின் முதன்மை சமையல் கலைஞர் ரெஜி மேத்யூஸ் கூறியதாவது:
எம்டிஆர் நிறுவனம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிறது. எங்களின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, கடந்த 15-ம் தேதி எம்டிஆர் நிறுவனத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள் 75 பேர், லோர்மன் நிறுவனத்துடன் இணைந்து, 123 அடி நீளமுள்ள தோசையை தயாரித்தோம். உலகின் நீளமான தோசை என்ற கின்னஸ் சாதனை படைத்தோம்.
எம்டிஆரின் பொம்மசந்திரா தொழிற்சாலையில் இதற்காகக் கடந்த 6 மாதங்களாக பல்வேறு பயிற்சிகள், திட்ட மிடல்கள், நிறையப் பேரின் ஒருங்கிணைப்பு ஆகியவை சேர்ந்துஇந்த சாதனையை சாத்தியப்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
20 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago