சென்னை: சென்னை துறைமுகம் கடந்த 2023-24-ம் நிதியாண்டில் மிகஅதிகபட்சமாக 48.99 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு சாதனைப் படைத்துள்ளது.
சென்னை துறைமுகத்தில் இருந்து கார்கள், உணவு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதேபோல், வெளிநாடுகளில் இருந்து இயந்திரங்கள், மருந்துப் பொருட்கள், மின்னணு மற்றும் மின்சார சாதனங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த 2022-23-ம் நிதியாண்டில் நேற்று(15-ம் தேதி) வரை சென்னை துறைமுகம் மிக அதிக அளவாக 48.99 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டான 2022-23-ம் நிதியாண்டில் 48.95 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டது.
இந்த சாதனைப் படைத்ததற்காக கப்பல் ஆபரேட்டர்கள், ஏஜென்ட்டுகள், சரக்கு முனையஆபரேட்டர்கள், பங்குதாரர்கள் மற்றும் துறைமுக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு துறைமுக தலைவர் சுனில் பாலிவால் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
» 60 நாட்களுக்கு முன்னரே அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு வசதி
» கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் ‘ரோடு-ஷோ’ | அனுமதி வழங்க காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
முக்கிய செய்திகள்
வணிகம்
56 mins ago
வணிகம்
1 hour ago
வணிகம்
2 hours ago
வணிகம்
1 hour ago
வணிகம்
2 hours ago
வணிகம்
3 hours ago
வணிகம்
4 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago