‘லாபம் ஞானத்தையும், நஷ்டம் பாடத்தையும் புகட்டும்’ - சக்சஸ் பார்முலாவை பகிர்ந்த அதானி

By செய்திப்பிரிவு

மும்பை: வணிக ரீதியாக தான் வெற்றி பெற உதவிய வெற்றி மந்திரத்தை பகிர்ந்துள்ளார் அதானி குழும தலைவர் கவுதம் அதானி. அதில் தொழிலில் ஈட்டும் லாபம் ஞானத்தையும், சந்திக்கும் நஷ்டம் பாடத்தையும் புகட்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான தொழில்களில் ஈடுபட்டு வருகிறார் கவுதம் அதானி. 61 வயதான அவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப் 15 இடங்களில் ஒருவராக உள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் புதன்கிழமை அன்று பேசி இருந்தார்.

அதில் அவர் தெரிவித்தது.. “மும்பையில் வைர வியாபாரத்தில் நான்கு ஆண்டு காலம் நான் பணியாற்றி உள்ளேன். ‘பெரிதாக யோசி. பெரிதாக கனவு கொள்’ என சொல்லும் நகரம். அதை நான் இங்கு இருந்தபோது அறிந்து கொண்டேன்.

தொழில்முனைவோராக செயல்படுவது சவாலான காரியம். இதில் இழப்பும் இருக்கும். நான் நஷ்டத்தை சந்தித்தபோது அதிலிருந்து பாடம் கற்றேன். லாபம் ஈட்டும்போது ஞானம் பெற்றேன். வணிகம் மேற்கொள்வது போர் புரிவதற்கு நிகரானது. இங்கு சந்தையிலும், தனக்கு தானும் போரிட வேண்டி இருக்கும்.

கடந்த ஆண்டு எங்கள் மீது முறைகேடு சார்ந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனாலும் நாங்கள் அதனை திறம்பட எதிர்கொண்டோம். நிறுவனத்தின் நற்பெயரை காத்தோம். அதேநேரத்தில் எங்களது செயல்பாட்டில் கவனம் வைத்தோம். அதில் வெற்றியும் கண்டோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE