மும்பை: தற்போது மக்களிடையே எஸ்ஐபிஎன்று அழைக்கப்படும் சிஸ்டமெட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் பரவலான வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில், எஸ்ஐபி-யில் அதிகபட்ச முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பிப்ரவரி மாதத்தில் ரூ.19,186 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் அது ரூ.18,838 கோடியாக இருந்தது. பிப்ரவரி மாத நிலவரப்படி, எஸ்ஐபி திட்டத்தின் கீழ் மொத்த முதலீடு ரூ.10.52 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஜனவரியுடன் ஒப்பிடுகையில் இது 2.49 சதவீதம் அதிகம் ஆகும். ஜனவரியில் அது ரூ.10.26 லட்சம் கோடியாக இருந்தது.
எஸ்ஐபி கணக்குகளின் எண்ணிக்கை 8.2 கோடியாக உள்ளது. கடந்த ஜனவரியில் மட்டும் 51.84 லட்சம் மற்றும் பிப்ரவரியில் 49.79 லட்சம் புதிய எஸ்ஐபி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
வணிகம்
6 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
9 days ago
வணிகம்
9 days ago