ரூ.54.95 லட்சத்தில் வால்வோ நிறுவனம் புதிய இ-கார் அறிமுகம்

By செய்திப்பிரிவு

சென்னை: பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் வால்வோகார் இந்தியா நிறுவனம், புதிதாக ‘எக்ஸ்.சி. 40 ரீசார்ஜ்’ (XC 40 Recharge) என்ற மாடலை ரூ.54.95 லட்சத்துக்கு அறிமுகம் செய்துள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

“2022-ஆம் ஆண்டு எக்ஸ்.சி.40 ரீசார்ஜ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது. அப்போது ஒற்றை மோட்டாரைக் கொண்ட வேரியன்ட் அறிமுகமானது. அப்போதைய சந்தை நிலவரத்திற்கேற்ப இதன் விலை நிர்ணயிக்கப்பட்டது. இப்போது அதிகரித்து வரும்பேட்டரி கார் உபயோகத்தைக் கருத்தில் கொண்டு, மேம்படுத்தப்பட்ட புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளோம்.

இதுபோல் ஆண்டுதோறும் ஒருபேட்டரி வாகனத்தை அறிமுகப்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம்” என்று வால்வோ கார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகஇயக்குநர் ஜோதி மல்ஹோத்ரா தெரிவித்தார்.

இது 238 ஹெச்.பி. திறனையும் 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். 7.3 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்டிவிடும். இது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் டபிள்யூ.எல்.டி.பி. மேற் கொண்ட ஆய்வில் 475 கி.மீ. தூரமும் ஐ.சி.ஏ.டி. சோதனையில் 592 கி.மீ. தூரமும் ஓடியது என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

9 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

மேலும்