மும்பை பங்குச்சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் கடும் சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 1,275 புள்ளிகள் அல்லது 3.6 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது.
சர்வதேச சந்தையில் நிலையற்ற தன்மை நிலவுவது, அமெரிக்க சந்தையில் பங்குகள் வீழ்ச்சி அடைந்ததால், முதலீட்டாளர்கள் அச்சமடைந்து பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனால், இந்த வீழ்ச்சி ஏற்பட்டது.
பட்ஜெட் தாக்கலின்போது, பங்குகளில் நீண்டகால முதலீடு செய்பவர்களுக்கு வரிவிதிப்பு கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்புக்குபின் சரிந்த பங்குச்சந்தை இன்னும் மீளவில்லை. கடந்த 6 நாட்களில் 1,274 புள்ளிகள் சரிந்துள்ளனத். குறிப்பாக ரியல்எஸ்டேட், நுகர்வோர் பொருட்கள், உலோகம், வங்கித்துறை பங்குகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளன.
ஆசியப் பங்குச்சந்தைகள், ஆஸ்திரேலிய பங்குச்சந்தைகளும், அமெரிக்க பங்குச்சந்தையின் நிலையற்றதன்மையைப் பார்த்து வீழ்ச்சி அடையத் தொடங்கின.
கடன் வாங்கும் போது ஏற்படும் வட்டிவீதத்தை அமெரிக்க அரசு உயர்த்தப்போவதாக எழுந்த அறிவிப்பையடுத்து, அமெரிக்க வால்ஸ்ட்ரீட் பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால், வரலாற்றில் இல்லாத அளவுக்கு அமெரிக்க பங்குசந்தைகளும் வீழ்ச்சி அடைந்தன. மேலும் ஹாங்காங், சிட்னி, சிங்கப்பூர், சியோல், தைப்பே, ஷாங்காய் ஆகிய பங்குச்சந்தைகளும் சரிவில் இருந்து தப்பவில்லை.
மேலும், ரிசர்வ் வங்கி இன்று நிதிக்கொள்கை அறிவிப்பை வெளியிடுகிறது. இதில் வட்டிவீதம் குறைக்கப்பட வாய்ப்பில்லை என்ற செய்தியும் இந்திய முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. இதனால், காலையில் இருந்து பங்குகளை வேகமாக விற்கத் தொடங்கினர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நேற்று ஒருநாளில் மட்டும் ரூ.1,263 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டாடா மோட்டார்ஸ், யெஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ,ஏசியன் பெயிண்ட், டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி, இஸ்டஸ்இன்ட் வங்கி, எச்டிஎப்சி வங்கி, மாருதி சுசுகி, லார்சன் அன்ட் டூப்ரோ, ஹீரோ மோட்டார் கார்ப் ஆகியவை காலையில் இருந்து கடும் சரிவைச் சந்தித்தன.
முக்கிய செய்திகள்
வணிகம்
43 mins ago
வணிகம்
4 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago