மும்பை: பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவை சார்ந்த செயல்பாடுகளை நிறுத்துவதற்கு மார்ச் 15 ஆம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய கோரிக்கை மீது ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவு கவனம் பெறுகிறது. யுபிஐ கட்டணங்களுக்கான மூன்றாம் தரப்பு விண்ணப்ப வழங்குநராக மாறுவதற்கான பேடிஎம் நிறுவனத்தின் கோரிக்கையை ஆராயுமாறு இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்திற்கு (NPCI) ரிசர்வ் வங்கி இன்று (வெள்ளிக்கிழமை) அறிவுறுத்தியுள்ளது.
பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு வந்த காரணத்தினால் வங்கி சேவை சார்ந்த செயல்பாட்டுக்கு கடந்த மாதம் தடை உத்தரவு பிறப்பித்தது ரிசர்வ் வங்கி. அதே நேரத்தில் பேடிஎம் செயலி மூலம் பயனர்கள் யுபிஐ பரிவர்த்தனை முறையின் கீழ் பணத்தை அனுப்பவும், பெறவும் முடியும். அதன் இயக்கம் வழக்கம் போலவே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், யுபிஐ கட்டணங்களுக்கான மூன்றாம் தரப்பு விண்ணப்ப வழங்குநராக மாறுவதற்கான பேடிஎம் நிறுவனத்தின் கோரிக்கையை ஆராயுமாறு இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்திற்கு (National Payments Corporation of India, NPCI) ரிசர்வ் வங்கி இன்று (வெள்ளிக்கிழமை) அறிவுறுத்தியுள்ளது. இதற்கு அனுமதி வழங்கப்பட்டால் பேடிஎம் நிறுவனமானது இந்தியாவின் பிரபல யுபிஐ (ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு) தளமாக பண பரிவர்த்தனைகளை மேலாண்மை செய்ய முடியும்.
இருப்பினும் ஏற்கெனவே ஆர்பிஐ பிறப்பித்த உத்தரவின்படி பேடிஎம் புதிய வாடிக்கையாளர்களை இணைக்க முடியாது. தற்போதுள்ள அனைத்து பயனாளர்களும் வேறு ஒரு தளத்தின் சேவைக்கு பாதுகாப்பாக மாற்றும் வரை புதிய வாடிக்கையாளர்களை பேடிஎம் முன்வைத்துள்ள மூன்றாம் தரப்பு விண்ணப்ப வழங்குநர் சேவையில் இணைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
வணிகம்
5 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago