14 ஆண்டுகளில் புதிய உச்சம்: மஞ்சள் குவிண்டால் ரூ.15,551 @ ஈரோடு சந்தை

By செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு மஞ்சள் சந்தையில் புது மஞ்சளுக்கு தொடர்ந்து நல்ல விலை கிடைத்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.15 ஆயிரத்து 551-க்கு விற்பனையானது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனைக் கூடம், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு சங்கம் ஆகிய நான்கு இடங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை ஏலம் மூலம் மஞ்சள் விற்பனை நடக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக மஞ்சளுக்கான விலையில் ஏற்றம் இல்லாததால் ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது.

மேலும், விவசாயிகள் இருப்பு வைத்துள்ள பழைய மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்ததால் அவற்றுக்கு குவிண்டால் ரூ.10 ஆயிரத்துக்குள் விலை கிடைத்து வந்தது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு குவிண்டால் மஞ்சள், ரூ.15 ஆயிரத்து 422-க்கு விற்பனையானது. மஞ்சளுக்கு உச்சபட்ச விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

புது மஞ்சளுக்கு நல்ல விலை: இந்த ஆண்டு தொடக்கம் முதல் மஞ்சளுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. பழைய மஞ்சளுக்கு சராசரியாக ரூ.9 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விலை கிடைத்து வருகிறது. அதே நேரத்தில் புதிய மஞ்சளுக்கு குவிண்டால் ரூ.13 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விலை கிடைத்து வருகிறது. புதிய மஞ்சளை வாங்குவதில் வியாபாரிகள் ஆர்வம் காட்டுவதால், இதன் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன் தினம் ஈரோடு கூட்டுறவு சங்கத்தில் நடந்த மஞ்சள் ஏலத்தில் புதிய மஞ்சள் குவிண்டால் ரூ.15 ஆயிரத்து 551 என்ற புதிய உச்சத்தை தொட்டது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு மஞ்சள் விலை இத்தகைய ஏற்றத்தைக் கண்டுள்ளது.

நேற்றைய விலை நிலவரம்: ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு 2,958 மூட்டை மஞ்சள் வரத்தான நிலையில், 556 மூட்டை மஞ்சள் விற்பனையானது. புது மஞ்சள் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.14 ஆயிரத்து 903-க்கும், பழைய மஞ்சள் அதிகபட்சமாக ரூ.13 ஆயிரத்து 821-க்கும் விற்பனையானது. ஈரோடு கூட்டுறவு சங்கத்தில் புதுமஞ்சள் அதிகபட்சமாக ரூ.14 ஆயிரத்து 609, பழைய மஞ்சள் ரூ.10 ஆயிரத்து 259-க்கு விற்பனையானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

17 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

10 days ago

வணிகம்

10 days ago

மேலும்