தொலைபேசிக்கு வரும் தொல்லை அழைப்புகள்: நாள் ஒன்றுக்கு 3 அழைப்புகளை பெறும் 60% இந்தியர்கள்

By செய்திப்பிரிவு

சென்னை: பெரும்பாலான மொபைல் போன் பயனர்கள் ‘லோன் வேண்டுமா?, கிரெடிட் கார்டு வேண்டுமா?’ என கேட்டு வரும் இம்சை அழைப்புகளை தினமும் எதிர்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் இந்திய மொபைல் போன் பயனர்களில் சுமார் 60 சதவீதம் பேருக்கு இது மாதிரியான அழைப்புகள், நாள் ஒன்றுக்கு சுமார் மூன்று என்ற எண்ணிக்கையில் பெற்றுக் கொண்டு இருப்பதாக ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.

‘லோக்கல் சர்கிள்ஸ்’ எனும் நிறுவனம் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் தனிநபர்களை டார்கெட் செய்து முன்னணி வங்கி நிறுவனங்கள் முதல் நிதி சார்ந்து இயங்கி வரும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த வகையான அழைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். அண்மைய காலமாக டெலிகாம் நிறுவனம் ஒன்றும் ‘உங்களது ரீசார்ஜ் முடிவடைந்துவிட்டது’ என டெலிபோன் சேல்ஸ் பிரதிநிதிகள் மூலம் நினைவூட்டி வரும் செயலும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 66 சதவீதமாக இருந்துள்ளது. இப்போது 60 சதவீதம் ஆகியுள்ளது. இதில் நிதி சேவைகள் - 54%, ரியல் எஸ்டேட் - 22%, ஹெல்த்கேர் - 7%, வேலைவாய்ப்பு - 4%, பழுது நீக்கும் சேவைகள் - 2%, சிறந்த பிளான், ஃபேன்சி எண் - 2% மற்றும் இதர பிரிவுகள் 7% பங்கினை கொண்டுள்ளன.

இந்த சர்வேயில் பங்கேற்ற நபர்கள், இது மாதிரியான அழைப்புகள் குறைந்தபட்சம் 1 முதல் அதிகபட்சம் 10 வரை தினமும் ரிசீவ் செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE