தூத்துக்குடியில் 2,000 ஏக்கரில் விண்வெளி தொழில் பூங்கா: தொழில் துறையினர் வரவேற்பு

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் 2,000 ஏக்கரில் விண்வெளி தொழில் பூங்கா அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட் டில் அறிவிக்கப்பட்டதை கனிமொழி எம்பி மற்றும் தொழில் துறையினர் வரவேற்றுள்ளனர்.

தமிழக அரசின் 2024 – 2025-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் 2,000ஏக்கரில் விண்வெளி தொழில்மற்றும் உந்துசக்தி பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனிமொழி எம்பி: இந்த அறிவிப்பு தொடர்பாக தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து:

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோசார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி அப்பகுதியில் விண்வெளி சார்ந்த தொழிற்சாலைகளை ஊக்குவிக்கும் விதமாக 2,000 ஏக்கர் பரப்பளவில், புதிய விண்வெளி தொழில்மற்றும் உந்துசக்தி பூங்கா அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்குஇத்திட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு நன்றி என தெரிவித் துள்ளார்.

தமிழக அரசின் பட்ஜெட் குறித்து தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.தமிழரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடியில் 2,000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளித் தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா அமைக்கப்பட இருப்பது வரவேற்கத்தக்கது.

தஞ்சை, சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய 5 மாநகரங்களில் நியோ டைடல் பூங்கா அமைக்கப்பட இருப்பதும், இதன் மூலம் 13 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருப்பதும் வரவேற்கத்தக்கது

ரூ.500 கோடியில் 5,000 ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை புனரமைக்கும் திட்டம், ரூ..365 கோடியில் 2,000 மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகள் அமைக்கும் திட்டம், சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு ரூ.1,557 கோடி நிதி ஒதுக்கீடு, இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு, ஒரு லட்சம் மாணவர்களுக்கு ரூ.2,500 கோடி கல்வி கடன் வழங்கும் திட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.20,198 கோடி ஒதுக்கீடு, 4.0 தரத்தில் 45 பாலிடெக்னிக் கல்லூரிகள் தரம் உயர்த்தப்படுவது, பள்ளி கல்வித்துறைக்கு ரூ.44,042 கோடி நிதி ஒதுக்கீடு போன்றவற்றை வரவேற்கிறோம் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE