சிப்காட் முதல் நியோ டைடல் பார்க் வரை: தமிழக பட்ஜெட் 2024-ல் புதிய அறிவிப்புகள்

By செய்திப்பிரிவு

சென்னை: “உயர்தொழில்நுட்ப தேவை அதிகரித்துக் கொண்டே கருத்திற்கொண்டு, 20 லட்சம் சதுர அடியில் இரண்டு கட்டங்களாக 1,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் தகவல் தொழில்நுட்பப் பூங்கா கோவை விளாங்குறிச்சியில் அமைக்கப்படும்” என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்த தமிழக பட்ஜெட் 2024-25 உரையில் தெரிவித்தார். இந்த பட்ஜெட்டில் அவர் வெளியிட்ட தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறை வளர்ச்சி சார்ந்த முக்கிய அறிவிப்புகள்:

> இந்தியாவின் முதலாவது PM MITRA ஜவுளிப் பூங்கா கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சியில் தொடங்கப்பட்டது. ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகளுக்கான ஒருங்கிணைந்த மற்றும் மதிப்பூட்டப்பட்ட உற்பத்தி மையமாகத் திகழவிருக்கும் இப்பூங்காவை அமைக்கும் பணிகள் 1,683 கோடி ரூபாய் மதிப்பில் வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் இரண்டு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

மேலும் சிப்காட் நிறுவனம் மூலம், சேலம் மாவட்டத்தில் 11 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டு வரும் பூங்காவின் மூலம் 8,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் 800 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்படும்.

> தஞ்சை மண்டலத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதமாக, தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 300 ஏக்கர் நிலப் பரப்பளவில் சிப்காட் நிறுவனம் ஒரு புதிய தொழிற்பூங்காவை அமைக்கும். இந்தப் புதிய பூங்காவில் உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல், தோல் அல்லாத காலணிகள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் LDIT ஏற்படுத்தாத தொழில்கள் அமைக்க உரிய முயற்சிகள் எடுக்கப்படும்.

> உடனடியாக தொழில் தொடங்கிட விரும்பும் அயல்நாட்டு முதலீட்டாளர்களின் தேவையை நிறைவுசெய்யும் விதமாக ஆயத்தத் தொழிற்கூடங்களை (Plug and Play facilities) உருவாக்குவதற்கான கொள்கையை சிப்காட் வரும் நிதியாண்டு முதல் செயல்படுத்தும். இந்த ஆயத்தத் தொழிற்கூடங்கள் பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் முதற்கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டம் மாணலூர் ஆகிய இடங்களில் அமைக்கப்படும்.

> தொழிற்துறைகளில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையில் நாட்டிலேயே அதிக பங்களிப்பை கொண்டிருப்பதும், மாநிலத்தின் தொழிற் சூழலமைப்பின் பாலினப் பன்முகத் தன்மையும் முற்போக்கான முதலீட்டாளர்கள் பலரை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கின்றன. இதனை உணர்ந்து, இவற்றை மேலும் உயர்த்திடவும். பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிப்பதை மேலும் அதிகரிக்கவும். ஒரு அரசு சிறப்புத் திட்டத்தை இந்த தமிழ்நாட்டைச் சார்ந்த பெண்கள், செயல்படுத்தும். மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் போன்ற 500 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அவர்களின் ஊதியத்தில் 10 சதவீதம் ஊதிய மானியம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

> பணிபுரியும் மகளிரின் மழலைக் குழந்தைகளின் நலன் காத்து உதவும் வகையில் அனைத்து சிப்காட் தொழிற்பேட்டைகளிலும் பொதுத்துறை பங்களிப்புடன் தனியார் குழந்தைகள் காப்பகங்கள் தொடங்கப்படும். மகப்பேறு, திருமணம் போன்ற பல காரணங்களினால் பணியில் இடைநிற்க நேரிட்டு. மீண்டும் வேலைக்குச் செல்ல விரும்பும் பெண்களுக்குத் தேவையான தனித்திறன் பயிற்சி அளிப்பதற்கான புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும்.

> சிறிய அளவிலான செயற்கோள்களை ஏவுவதற்கான விண்வெளித் தளத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் இஸ்ரோ நிறுவணம் தற்போது உருவாக்கி வருகிறது. அதனையொட்டிய பகுதிகளில் வான்வெளி சார்ந்த தொழிற்சாலைகளை ஊக்குவிக்கும் விதமாக 2000 ஏக்கர் நிலப்பரப்பளவில் ஒரு புதிய விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா (Space Industrial and Propellant Park) டிட்கோ நிறுவனத்தால் அமைக்கப்படும்.

> இந்தியாவில், உலகளாவிய திறன் மையங்கள் அமைப்பதற்குரிய தலைசிறந்த இடமாக தமிழ்நாட்டினை உருவாக்குவதற்கு. மாநிலத்தில் அமைய புதிய உலகளாவிய திறன் மேம்பாட்டு மையங்களில், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட மாத ஊதியத்துடன் உருவாக்கப்படும். உயர்திறன் மிக்க வேலைகளுக்கு முதலாமாண்டு 30 சதவிதம், இரண்டாமாண்டு 20 சதவீதம் மற்றும் மூன்றாமாண்டு 10 சதவீதம் ஊதிய மானியம் வழங்கப்படும்.

மேலும், கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களில் உலகளாவிய திறன் மையங்கள் அமைப்பதற்கான உகந்த சூழல் வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஏற்படுத்தப்படும். இந்த வரவு செலவுத் திட்ட மதிப்புகளில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்கு 2295 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொழில் நுட்பம்: வரும் 2024-25 ஆம் நிதியாண்டில் பல்வேறு துறைத் தலைமை அலுவலகங்களுக்கும் சார்பு அலுவலகங்களுக்கும் தேவையான உள்ளிட்டவற்றை மென்பொருட்கள் வழங்கவும் மற்றும் கணினிகள் அலுவலர்களுக்கு கூரிய திறன்பயிற்சி அளித்து மின் அலுவலகத் திட்டத்தை (e-Office) விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 30 கோடி ரூபாய் 2024-25 ஆம் ஆண்டின் வரவு-செலவத் திட்ட மதிப்பீடுகளில் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசுசார் இணையவழிச் சேவைகளை மேலும் துரிதமாக அளித்திடும் வகையில், தமிழக மின்னணு நிறுவனம் (ELCOT) மூலம் பேரிடர் தரவு மீட்பு வசதிகளுடன் கூடிய மேகக் கணினியக் கட்டமைப்பு கொண்டதாக மாநிலத் தரவு மையம் அடுத்த 5 ஆண்டுகளில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.

இணைய உலகத்தின் தகவல் பரிமாற்றத்தை மேலும் பரவலாக்கும் வகையில், சென்னை போன்றே கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் ஆயிரம் முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவைகள் வழங்கப்படும்.

நியோ டைடல் பார்க்: கடந்த 2000 ஆம் ஆண்டில் சென்னையில் டைடல் நிறுவனத்தை அமைத்து தமிழக தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வித்திட்டவர் நவீன தமிழ்நாட்டின் சிற்பி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவர் வகுத்துத் தந்திட்ட தகவல் நெடுஞ்சாலையில், தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் இணைந்திட வேண்டும் என்ற நோக்கில் மதுரையில் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 இலட்சத்து 40 ஆயிரம் சதுரஅடி பரப்பளவிலும், திருச்சியில் 345 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 இலட்சத்து 30 ஆயிரம் சதுரஅடி பரப்பளவிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் (Neo Tidel Parks) அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 13,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

உலக அளவில் அண்மைக்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள புதிய தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) குறித்தும், அது தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு தரப்பிலும் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் 2005 அளவில் அண்மைக்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள புதிய தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) குறித்தும், அது தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு தரப்பிலும் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்தும் இந்த அரசு கவனமுடன் ஆய்வு செய்து வருகிறது.

கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்துறை, ஆராய்ச்சி மற்றும் மருத்துவத் துறைகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதன் வாய்ப்புகள் குறித்த ஆக்கபூர்வமான வழிகாட்டுதல்களையும், இப்புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாட்டினை வழிநடத்திடத் தேவைப்படும் வரையறைகளைத் தெளிவாக வகுத்திடவும், முதல்வர் தலைமையில் 'தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் (Tamil Nadu Artificial Intelligence Mission) gar ஏற்படுத்தப்படும். நிறுவனங்களின் தமிழ்நாட்டின் பேராசிரியர்கள், தலைசிறந்த கல்வி மின்னணு தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் துறை வல்லுநர்கள் இந்த அமைப்பில் இடம் பெற்றிருப்பர்.

நாட்டிலேயே வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான கோயம்புத்தூரில், தகவல் தொழில்நுட்பம், வாழ்வியல் அறிவியல், விண்வெளி பொறியியல் துறைக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அலுவலகங்களுக்கான வருகிறது. இதனைக் போன்ற உயர்தொழில்நுட்ப தேவை அதிகரித்துக் கொண்டே கருத்திற்கொண்டு, 20 லட்சம் சதுரஅடியில் இரண்டு கட்டங்களாக 1,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் தகவல் தொழில்நுட்பப் பூங்கா கோவை விளாங்குறிச்சியில் அமைக்கப்படும்.| வாசிக்க > தமிழக பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

மேலும்