சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடப்படும் மத்திய அரசின் தங்கப் பத்திரங்கள் விற்பனை அஞ்சல் நிலையங்களில் பிப்ரவரி 12-ம் தேதி முதல் பிப்ரவரி 16-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்திய ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடப்படும் மத்திய அரசின் தங்கப் பத்திரங்கள் விற்பனை அஞ்சல் நிலையங்களில் பிப்ரவரி 12-ம் தேதி முதல் பிப்ரவரி 16-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. இது பத்திர வடிவில் இருப்பதால் பாதுகாப்பாக இருப்பதுடன், தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும்.
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6263 ஆகும். ஒருவர் ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக 4 கிலோ வரை தங்கம் வாங்கலாம். பொது மக்கள், அறக்கட்டளைகள், பல்கலைக்கழகங்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவை இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
12 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
13 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago