சென்செக்ஸ் 523 புள்ளிகள் வீழ்ச்சி

By செய்திப்பிரிவு

மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் நேற்று சரிவுடன் முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண்ணான சென்செக்ஸ் நேற்று 523 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 71,072-ல் நிலை பெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண்ணான நிப்டி, 166 புள்ளிகள் சரிந்து 21,616-ல் நிறைவடைந்தது.

வங்கி மற்றும் நிதித் துறை சார்ந்த பங்குகள் தொடர்ந்து சரிந்து வருவது மற்றும் முதலீட்டாளர்கள் லாபத்தை எடுப்பதற்காக பங்குகளை அதிக அளவில் விற்க முன்வந்தது உள்ளிட்ட காரணங்களால் பங்குச் சந்தைகள் சரிந்ததாக நிபுணர்கள் கூறியுள்ளனர். நேற்றைய வர்த்தகத்தில் மூலதன பொருட்கள், எண்ணெய் எரிவாயு மற்றும் உலோக துறை சார்ந்த பங்குகள் அதிகம் வீழ்ச்சியடைந்தன. ஐ.டி., சுகாதார துறை சார்ந்த பங்குகள் உயர்வைக் கண்டன. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் 1,004 பங்குகள் உயர்வுடனும் 2,986 பங்குகள் சரிவுடனும் முடிந்தன. 89 பங்குகள் விலை மாற்றமின்றி முடிவடைந்தது.

டாடா ஸ்டீல், என்டிபிசி, எஸ்பிஐ, இண்டஸ்இன்ட் பாங்க், ஐடிசி மற்றும் கோட்டக் பாங்க் ஆகிய பங்குகள் அதிகம் சரிந்தன (2.76% வரை). விப்ரோ, எச்சிஎல் டெக், மஹிந்திரா அன்ட் மஹிந்திரா, இன்போசிஸ் ஆகிய பங்குகள் அதிக உயர்வை (2.26% வரை) சந்தித்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE