ரூ.25 லட்சம் கோடிக்கு மின்னணு சாதன உற்பத்தி இலக்கை அடைய முடியும்: மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: 30,000 கோடி டாலர் அதாவது ரூ.25 லட்சம் கோடிக்கு மின்னணு சாதன உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கு எட்டக்கூடியதே என்று மத்திய தகவல் தொடர்பு மற்றும் ரயில்வே துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

உற்பத்தி துறையை ஊக்குவிப் பதற்கான மத்திய அரசின் செயல் திட்டங்களுக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக 30,000 கோடி டாலர் மதிப்புக்கு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இலக்கு வரும் ஆண்டுகளில் எளிதில் எட்டப்படும். இவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலமாக 10,000 கோடி டாலர் வருமானமாக ஈட்டப்படும்.

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும், புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரயில்வே துறையில் விரிவாக்க பணிகள் மற்றும் நவீனமாக்கல் நடவடிக்கைகளும் பலகோடி மதிப்பீட்டில் செய்யப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் எலக்ட்ரா னிக்ஸ் பொருட்கள் உற்பத்தி இலக்கு எட்டப்படும் என்பது யதார்த்தமானதே.

மக்களுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதில் பிரதமர் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளார்.

முந்தைய ஆட்சியின் 2004-2014 காலகட்டத்தில் ரயில்வே நவீனமயமாக்கலுக்கு 200 கோடி டாலரை மட்டுமே செலவிடப்பட்ட நிலையில், மோடி அசு அதற்காக 4,000 கோடி டாலரை ஒதுக்கியுள்ளது. அதேபோன்று, முன்பு ஒரு நாளில் 4 கிலோ மீட்டர் அளவுக்கு மட்டுமே அமைக்கப்பட்டு வந்த ரயில் பாதை தற்போது, ஒரு நாளில் 15 கி.மீ என்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 5,200 கி.மீ. ரயில் பாதை புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

மோடி அரசுக்கு முந்தைய காலகட்டத்தில் 20,000 கி.மீ. ரயில்பாதை மட்டுமே மின்மயமாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த பத்தாண்டு களில் மட்டும் 41,000 கி.மீ. பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரதமரின் விசாலமான பார்வையை நாம் அறியலாம்.

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது 5ஜி சேவையை இந்தியா மிக வேகமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வாறு அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE