சென்னை: இன்க்ரெட் மணி நிறுவனம் ‘இன்க்ரெட் 1.5x நிப்டி அக்சலரேட்டர் எம்எல்டி’ என்ற பெயரில் புதிய முதலீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இது இந்நிறுவனத்தின் 2-வது பங்குச் சந்தையுடன் தொடர்புடைய கடன் பத்திர (எம்எல்டி) முதலீட்டு திட்டம் ஆகும். நேற்று தொடங்கிய இந்த திட்டத்தில் வரும் 29-ம் தேதி வரை முதலீடு செய்யலாம். இது நிப்டி 50 குறியீடு வழங்கும் வருமானத்தைப் போல ஒன்றரை மடங்குக்கு (150%) சமமான வருமானத்தை வழங்கும். வரும் 2026-ம் ஆண்டு முதிர்வடையும். இந்த முதலீட்டுத் திட்டம், 100% அசல் தொகைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
இதுகுறித்து இன்க்ரெட் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி விஜய் குப்பா கூறும்போது, “இந்திய பங்குச் சந்தைகள் உச்சபட்ச உயர்வை ஒட்டி அமைந்துள்ளன. முதலீட்டாளர்கள் முதலீட்டை தொடர்வதில் இன்னமும் ஆர்வமாக உள்ளனர். ஆபத்து-வருவாய் கண்ணோட்டத்தில் ஒருவர் தங்கள் முதலீட்டு தொகுப்பை மதிப்பீடு செய்ய வேண்டிய நேரம் இது. இந்த தருணத்தில் நம்பிக்கையுடன் முதலீடு செய்ய இந்த திட்டம் உகந்ததாக இருக்கும்” என்றார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
12 mins ago
வணிகம்
23 mins ago
வணிகம்
15 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago