9 மாதங்களில் என்எல்சி இந்தியாவின் வருவாய் ரூ.4,137 கோடி

By செய்திப்பிரிவு

கடலூர்: என்எல்சி இந்தியா பொதுத் துறை நிறுவனத்தின், நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களுக்கான கடனீட்டுக்கு முந்தைய வருவாய் ரூ.4,137 கோடி என அந்நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

01.04.2023 முதல் 31.12.2023 வரையிலான நடப்பு நிதியாண்டின் ( 2023 - 24 ) முதல் ஒன்பது மாதங்கள் மற்றும் மூன்றாவது காலாண்டில் என்எல்சி இந்தியா பொதுத் துறை நிறுவனத்தின் செயல்பாடுகளை அறிவிப்பதற்காக நேற்று முன்தினம் ( பிப்.6 ) சென்னையில், நிறுவனத்தின் இயக்குநர் குழுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், என்எல்சி இந்தியா பொதுத் துறை நிறுவனம் தனியாகவும், அதன் துணை நிறுவனங்களுடன் இணைந்தும் ஒட்டு மொத் தமாகவும் மேற்கொண்ட, உற்பத்தி மற்றும் நிதி நிலை செயல்பாடுகள் குறித்த, அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

அதன்படி, மூலதனச் செலவு ( CAPEX ), நடப்பு நிதியாண்டு இலக் கான ரூ.2,880 கோடிக்கு எதிராக, இந்தாண்டு ( 2024 ) ஜனவரி மாதம் வரையில், ரூ. 3,493 கோடியை ஈட்டியுள்ளது. இது, ஆண்டுக்கான இலக்கை விட 21 சதவீதம் அதிகமாகும். கடந்த 31.12.2023 அன்றுடன் நிறைவடைந்த, நடப்பு நிதியாண் டின் முதல் ஒன்பது மாதங்களில், வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.1,673 கோடியாகும். இது, கடந்த நிதியாண்டின் இதே கால கட்டத்தில், ரூ. 474 கோடியாக இருந்தது. இந்த வகையில், 253 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

31.12.2023 அன்றுடன் நிறை வடைந்த நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், வரிக்கு முந்தைய லாபம், ரூ.2,566 கோடியாகும். இது, கடந்த நிதியாண்டின் இதேகாலகட்டத்தில், ரூ. 568 கோடியாக இருந்தது. இந்த வகையில், 352 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 31.12.2023 அன்றுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களுக்கான, நிறுவனத்தின் வட்டி, வரிகள், தேய்மா னம் மற்றும் கடனீட்டுக்கு முந்தைய வருவாய் ( EBITDA ), ரூ.4,137 கோடியாகும். இது, இதே கால கட்டத்தில், கடந்த நிதியாண்டில், ரூ.2,212 கோடியாக இருந்தது. இதன்மூலம் இந்த வகையில், 87 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

ஒருங்கிணைந்த வருவாய்: 31.12.2023-ல் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், இந்நிறுவனம் அதன் துணை நிறுவனங்களுடன் இணைந்து ஈட்டிய, வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.1,754 கோடியாகும். 31.12.2023-ல் நிறைவடைந்த நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்நிறுவனம், அதன் துணை நிறுவனங்களுடன் இணைந்து ஈட்டிய, வரிக்கு முந்தைய லாபம் ரூ.2,716 கோடியாகும்.

என்எல்சி இந்தியா நிறுவனம், 2023-24-ம் ஆண்டுக்கான இடைக்கால பங்கு ஈவுத் தொகையாக செலுத்தப்பட்ட சம பங்கு மூலதனத்தில் 15 சதவீதத்தை பங்கு தாரர்களுக்கு அறிவித்துள்ளது. மேற்கண்ட இத்தகவலை என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. 2,400 மெகாவாட் புதிய அனல் மின் திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல்: ‘என்எல்சி இந்தியா கிரீன் எனர்ஜி லிமிடெட்’ ( என்ஐஜிஇஎல் ) என்ற முழு உரிமையுடைய நிறுவனத்தை ஏற்படுத்தி உள்ளது. என்எல்சி துணை நிறுவனமான என்யுபிபிஎல் ( NUPPL ) ன், கதம்பூர் அனல் மின் நிலையத்தில் முதல் அலகு ( 660 மெகா வாட் ), கடந்த 04.11.2023 அன்று பரிசோதனை முறையிலான மின் உற்பத்தியை தொடங்கியது.

மத்திய நிலக்கரி அமைச்சகம், 20.12.2023 அன்று, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கங்களுக்கு, நட்சத்திரத் தரத்துக்கான, 13 விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. மேலும், என்எல்சி இந்தியாவின் சுரங்கங்கள், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக, நாட்டின் சிறந்த சுரங்கங்களாக மதிப்பிடப்பட்டு வருகிறது.

ஒடிசாவில், 2,400 மெகாவாட் ( 3 x 800 மெகா வாட் ), பிட் ஹெட் அல்ட்ரா சூப்பர் கிரிட்டிக்கல் என்எல்சி தலபிரா அனல் மின் திட்டத்தை அமைப்பதற்காக, 12.01.2024 அன்று பாரத் ஹெவி எலக்ட்ரிக் கல்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு இபிசி எனப்படும் பொறியியல் கொள்முதல் மற்றும் கட்டுமானத்துக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

2,400 மெகாவாட் ( 3 x 800 மெகா வாட் ), பிட் ஹெட் சூப்பர் கிரிட்டிக்கல் என்எல்சி தலபிரா அனல் மின் திட்டத்துக்கு, பிப்.3-ம்தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று கடந்த 9 மாதங்களில் தங்களது நிறுவனத்தின் சாதனைகளாக என்எல்சி இந்தியா பொதுத்துறை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

மேலும்