சேலம்: சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து பூண்டு விலை அதிகரித்து கிலோ ரூ.520 வரை விற்பனையாவதால் இல்லத்தரசிகள் கலக்க மடைந்துள்ளனர்.
சமையலுக்கு அவசிய தேவையாக பூண்டு இருப்பதால், அதன் முக்கியத்துவம் தவிர்க்க முடியாததாக உள்ளது. தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் பூண்டு விளைவிக்கப்படுகிறது. அதேபோல, வட மாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பூண்டுகளைக் கொண்டே, மக்களின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் பூண்டு மொத்த விற்பனை மையமாக செவ்வாய்ப் பேட்டை பால் மார்க்கெட், லீ பஜார் உள்ளது. இங்கிருந்து நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பூண்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
தற்போது வட மாநிலங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இருந்து பூண்டு வரத்து குறைந்துள்ளது. இதனால் பூண்டு விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. விலை ஏற்றம் காரணமாக இல்லத்தரசிகள் கலக்கமடைந்துள்ளனர். குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கமாக ஆண்டு தோறும் ஜனவரி மாத பிற்பகுதியில் பூண்டு அறுவடை தொடங்கும். ஆனால், நடப்பாண்டு கடந்த ஆண்டை காட்டிலும் பூண்டு விளைச்சல் பெரும் சரிவை சந்தித்துள்ளது. தேவையை விட வரத்து மிகவும் குறைவாக உள்ளதால், பூண்டு விலை ஏற்றம் தவிர்க்க முடியாததாகிவிட்டது.
இது குறித்து சேலத்தைச் சேர்ந்த பூண்டு வியாபாரிகள் கூறியது:கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பூண்டு சிறிய ரகம் கிலோ ரூ.180 என்ற விலையிலும், நடுத்தர ரகம் ரூ.240, உலர்ந்த உயர்தரமான பூண்டு ரூ.280 என்ற விலையில் விற்பனையானது. ஆனால் வரத்து மிகவும் குறைந்து விட்டதால் தற்போது, சிறிய ரக பூண்டு கிலோ ரூ.380-க்கும், நடுத்தரம் ரூ.420-க்கும், உயர்தரம் ரூ.520-க்கும் விற்பனையாகிறது. இவ்வாறு அவர் கூறினர்.
அனைத்து வீடுகளிலும் ரசம், சாம்பார், இறைச்சி உள்ளிட்ட அனைத்து உணவு வகைகளுக்கும் பூண்டு அவசியம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பூண்டு விலை கடுமையாக விலை ஏற்றம் கண்டுள்ளதால், பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். வரும் நாட்களில் மேலும் பூண்டு விலை ஏறக்கூடும் என்பதால், அனைத்து தரப்பு மக்களும் விலைவாசி உயர்வை கண்டு கலக்கமடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
வணிகம்
5 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago