மீண்டும் ரூ.47 ஆயிரத்தை எட்டியது ஒரு பவுன் தங்கம் விலை

By செய்திப்பிரிவு

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.47,040-க்கு விற்பனையாகிறது. கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.42,760-க்கு விற்பனையானது. 26-ம் தேதி ரூ.43,040 ஆக அதிகரித்தது.

பின்னர், கடந்த ஆண்டு பிப். 2-ம் தேதி ஒரு பவுன் ரூ.44,040 என்ற புதிய உச்சத்தை எட்டி விற்பனையானது. தொடர்ந்து மார்ச் 5-ம் தேதி ரூ.45,520-ஆகவும், ஜுன் மாதம் 4-ம் தேதி ரூ.46 ஆயிரமாகவும் உயர்ந்தது. பின்னர், டிசம்பர்23-ம் தேதி பவுன் ரூ.47 ஆயிரமாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. பின்னர் தங்கம் விலை குறைந்து ரூ.46 ஆயிரத்துக்குள் விற்பனை ஆனது. இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

சென்னையில் நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.5,380-க்கும், பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.47,040க்கும் விற்பனையானது. இந்த திடீர் விலையேற்றத்தால் நகை வாங்குவோர் கவலை அடைந்துள்ளனர். இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை சவரன் ரூ.50,800க்கு விற்பனையாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

9 days ago

மேலும்