மும்பை: நிதி, வங்கி மற்றும் ஊடக பங்குகளின் கடும் சரிவினால் செவ்வாய்க்கிழமை வர்த்தக நேரத்தின் இறுதியில் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு காரணமாக நேற்றைய விடுமுறைக்கு பின்னர் இந்திய பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கியது. உலகளாவிய சந்தைகளின் சாதகமான நிலை, வலுவான மூன்றாவது காலாண்டு வருவாய் போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் இன்றைய காலை வர்த்தகத்தை ஏற்றத்துடனேயே தொடங்கின. சென்செக்ஸ் 444 புள்ளிகள் உயர்ந்து 71,868.20 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 144 புள்ளிகள் உயர்ந்து 21,716.70 ஆக இருந்தது. இந்திய பங்குச்சந்தை முதல் முறையாக ஹாங்காங் பங்குச்சந்தையை பின்னுக்குத் தள்ளி, உலகின் நான்காவது பெரிய பங்குச்சந்தையாக உருவெடுத்துள்ளதாக வந்த ப்ளூம்பெக் அறிக்கையால் லாபம் அதிகரித்தது.
இந்தநிலையில், சோனி நிறுவனம் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள தனது இணைப்புத் திட்டத்தை திரும்பப் பெற்றதால், ஜீ என்டர்டயின்மென்ட்டின் பங்குகள் 33 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. இதனால் ஊடகப் பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. இது பங்குச் சந்தைகளின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தாலும் ஹெச்டிஎஃப்சி வங்கி பங்குகளின் தொடர் சரிவு காரணமாக ஹெவிவெயிட் வங்கி மற்றும் நிதிப் பங்குகளின் சரிவு காரணமாக பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன.
வர்த்தக நேர நிறைவின்போது மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1053.10 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 70,370.55 ஆக இருந்தது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 333.00 புள்ளிகள் வீழ்ந்து 21,238.80 ஆக இருந்தது.
» இந்தியா 2025-ல் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயரும்: மத்திய அமைச்சர் நம்பிக்கை
» தூத்துக்குடியில் தாமதமாகும் உப்பு உற்பத்தி - கூடுதல் செலவால் உற்பத்தியாளர்கள் தவிப்பு
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்த வரை சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல்,ஐசிஐசிஐ பேங்க், பவர் கிரிடு கார்ப்பரேஷன், பஜாஜ் ஃபின்சர்வ், டிசிஎஸ் பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன. இன்டஸ்இன்ட் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், ஆக்ஸிஸ் பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, எம் அண்ட் எம், என்டிபிசி, விப்ரோ, டெக் மகேந்திரா, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டைட்டன் கம்பெனி, கோடாக் மகேந்திரா பேங்க், மாருதி சுசூகி, நெஸ்ட்லே இந்தியா, இன்போசிஸ் பங்குகள் வீழ்ச்சியடைந்திருந்தன.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 mins ago
வணிகம்
14 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago