சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.46,240-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதார சூழல்,அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த மாதம் 28-ம் தேதி, ஒரு பவுன்தங்கம் ரூ.47,560 ஆக இருந்தது. இதன்பிறகு, இந்த மாத தொடக்கத்தில் தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. கடந்த 15-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.46,960 ஆக இருந்தது. இதன்பிறகு, படிப்படியாக விலை குறைந்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.240குறைந்து, ரூ.46,240-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து, ரூ.5,780-க்கு விற்கப்பட்டது. இதுபோல, வெள்ளி கிராமுக்கு 40 பைசா குறைந்து, ரூ.77 ஆகவும், பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.77,000 ஆகவும் இருந்தது.
» “ஒரு பிரிவினரை வருத்தப்படுத்தி ராமர் கோயில் கட்டியதில் எனக்கு உடன்பாடில்லை” - வேல்முருகன் கருத்து
» ஜன.19, 22, 24, 26-ம் தேதிகளில் சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
முக்கிய செய்திகள்
வணிகம்
4 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago