தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்தது

By செய்திப்பிரிவு

சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. இதன்படி, கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,860-க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,880-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை பவுன் ரூ.50,640-க்கு விற்பனையாகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE