100 புத்தாக்க நிறுவனங்களுக்கு தொழில் வாய்ப்பு: ஐஐடி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: நடப்பாண்டில் 100 புத்தாக்க நிறுவனங்கள் தொழில் ஊக்குவிப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக சென்னை ஐஐடி அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை ஐஐடி நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஐஐடியில் உள்ள 'இன்குபேஷன் செல்', பல்வேறு கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முனைவுத் திட்டங்களை வளர்த்தெடுத்தல், அதற்கு தேவையான ஆதரவுகளை வழங்குதல், அதை மேற்பார்வையிடுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. 2023-ம் ஆண்டில் சென்னை ஐஐடி பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ளது.

தொடர்ந்து 2024-ம்ஆண்டிலும் பெரிய அளவிலான திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன. அந்த வகையில், நடப்பாண்டில் 2 புதிய படிப்புகள் தொடங்கப்படுவதுடன், 100 புத்தாக்க நிறுவனங்களும் தொழில் ஊக்குவிப்பில் ஈடுபடுத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், உலக அளவிலான தரவரிசையில் முன்னிலை பெறும் நோக்கில் ஐஐடி சார்பில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

5 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

9 days ago

வணிகம்

9 days ago

மேலும்