தூத்துக்குடியில் விவசாயிகள், வணிகர்கள் நிவாரணம் பெறும் வழிமுறை: அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பான்மையான பகுதிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் முழுவதுமாக சேதமடைந்த வீடுகளை புதிதாக கட்டுவதற்கு ரூ.4 லட்சமும், பகுதி சேதமடைந்த வீடுகளை சீரமைத்திட ரூ.2 லட்சம் வரையிலும் வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வெள்ளத்தால் இறந்த பசு மற்றும் எருமைக்கு ரூ.37,500, வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுக்கு ரூ.4,000, கோழிக்கு ரூ.100 வழங்கப்படும். மேலும் புதிதாக கால் நடைகளை வாங்கிட தலா ரூ.1.50 லட்சம் கடன் வழங்கப்படும்.

இந்த உதவிகளை பெற சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களை அணுகி பாதிக்கப்பட்ட மக்கள் மனு அளித்திடலாம். இதே போல் வெள்ளத்தால் மானாவாரி மற்றும் நஞ்செய் நிலங்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய இழப்பீடு பெற தகுந்தஆவணங்களுடன் கிராம நிர்வாக அலுவலகத்தை அணுகிட வேண்டும். மீன்பிடி படகுகள், இயந்திரங்கள், வலைகள் சேதமடைந்த மீனவர்கள் நிவாரணம் பெற தகுந்த ஆவணங்களுடன் மீன் வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

உப்பளத் தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை ரூ.3,000 அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த உப்பளத் தொழிலாளர்கள் வாரியத்தை அணுகி நிவாரணத் தொகை பெற்றுக் கொள்ளலாம். சான்றிதழ்களை இழந்த பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் விண்ணப்பம் எழுதிக் கொடுத்தால் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும். பாடப் புத்தகங்களை இழந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு புதிய பாடப் புத்தகங்கள் அவர்கள் பயிலும் பள்ளியில் வழங்கப்படும்.

வருவாய்த் துறை மற்றும் இதர அரசுத் துறையால் வழங்கப்படும் சான்றிதழ்கள், ஆவணங்கள், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்ற அரசு ஆவணங்களை இழந்தவர்கள் தங்கள்பகுதிக்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மழை வெள்ளத்தால் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பாதிக்கப்பட்ட இரண்டு சக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கான சிறப்பு முகாம் 03.01.2024 ( இன்று ) காலை 10 மணி முதல் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறவுள்ளது. பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் இம்முகாமில் பங்கேற்று நிவாரணத் தொகை பெற்றுக் கொள்ளலாம்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு கடன் திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி சிறு வணிகர்கள், சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை 4 சதவீத வட்டியிலும், ரூ.1 லட்சம் வரை 6 சதவீத வட்டியிலும் கடன் வழங்கப்படும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் வரை ஆண்டுக்கு 6 சதவீத சிறப்பு சலுகை வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும். எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் உரிய நிவாரணம் கிடைத்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

வணிகம்

20 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்