சென்னை: இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனைகளை 2023-ல் பல மடங்கு உயர்வை கண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பரிவர்த்தனைகள் மற்றும் மதிப்பு என இரண்டு ரீதியாகவும் உயர்ந்துள்ளதாக தகவல்.
2022-23 நிதியாண்டில் சுமார் 8,375 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது 2017-18 நிதியாண்டினை காட்டிலும் வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் 147 சதவீதம் உயர்வு கண்டுள்ளது. 2017-18 நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 92 கோடி. 2022-23 நிதியாண்டில் டிஜிட்டல் பேமெண்ட் முறைகளில் யுபிஐ-யின் பங்கு 62 சதவீதம். 2023 டிசம்பர் மாதத்தில் ரூ.17.4 லட்சம் கோடி என்ற மதிப்பை யுபிஐ பரிவர்த்தனைகள் எட்டியது. இதனை ரிசர்வ் வங்கி உறுதி செய்தது.
2017-18 நிதியாண்டில் யுபிஐ பரிவர்த்தனையின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடி. அதுவே 2022-23 நிதியாண்டில் யுபிஐ பரிவர்த்தனையின் மதிப்பு ரூ.139 லட்சம் கோடி என அதிகரித்துள்ளது. இதே போல கிராமப்புற சில்லறை வர்த்தகத்திலும் யுபிஐ பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நொடிப் பொழுதில் டிஜிட்டல் முறையில் சாமானியர்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் பணத்தை பெறவும், அனுப்பவும் உதவுகிறது யுபிஐ பேமென்ட். இது வணிகர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் சாதகமானதாகவும் உள்ளது. நகரம் முதல் கிராமம் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ செயல்பாட்டில் உள்ளது. இதனால், ரொக்கத்தின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. கூகுள் பே, போன் பே, அமேசான் பே, BHIM என பல்வேறு செயலிகளின் மூலம் இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. நாளுக்கு நாள் இதன் பயனர்கள் மற்றும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
6 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago