2024 ஏப்ரல் மாதம் முதல் வருமான வரி தாக்கலுக்கு புதிய படிவம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய நேரடி வரிகள் வாரியம், 2023 - 24 நிதி ஆண்டுக்கான புதிய வருமான வரி ரிட்டர்ன் படிவங்களை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய படிவங்கள் 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற முறை பிப்ரவரி மாதம் படிவங்கள் வெளியிடப்பட்ட நிலையில், இந்த முறை வழக்கத்தை விடவும் முன்னதாக படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஐடிஆர் 1 (SAHAJ) மற்றும் ஐடிஆர் 4 (SUGAM) ஆகிய இரு புதிய வருமான வரி ரிட்டன் படிவங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது. ஐடிஆர் 1 படிவமானது, ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனி நபர்களுக்கானது. ஊதியம், வட்டி வருவாய், வேளாண் துறை மூலமாக வருவாய் பெறுபவர்கள் இந்தப் பிரிவில் அடங்குவர்.

ஐடிஆர் 4 படிவமானது, ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை தொழில் மூலம் வருவாய் ஈட்டும் தனிநபர்கள், நிறுவனங்களுக்கானது. இந்தப் புதிய படிவங்களில், வரிதாரர்கள் தங்கள் அனைத்து வங்கிக் கணக்குகளையும் பண ரசீது விவரங்களையும் குறிப்பிட வேண்டும். குறிப்பாக, முந்தைய ஆண்டில் இந்தியாவில் செயல்பாட்டில் இருந்த வங்கிக் கணக்குகள், அவை எந்த வகை கணக்குகள் உள்ளிட்ட விவரங்களை வரிதாரர் கள் தெரிவிக்க வேண்டும்.

வழக்கத்தை விட முன்னதாக படிவங்கள் வெளியிடப்பட்டிருப்பது, சீக்கிரமே படிவங்களை தாக்கல் செய்ய வரிதாரர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE