சென்னை: சென்னையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.47,000-க்கு விற்பனையானது. கடந்த 6 மாதங்களுக்கு பிறகு, தங்கம் விலை மீண்டும் ரூ.47 ஆயிரத்தை எட்டியுள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில்தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. கடந்த மே 1-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.45,040-க்கும், மே 3-ம் தேதி ரூ.45,648-க்கும் விற்பனை ஆனது. பின்னர் ஜூன் மாதத்தில் பவுன் விலை ரூ.47,000 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது. அதன் பின்னர், தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
நேற்று முன்தினம் (டிசம்பர் 22) ஒரு கிராம் ரூ.5,860, ஒரு பவுன் ரூ.46,880 என விற்பனையான நிலையில், நேற்று ஒரு கிராமுக்கு ரூ.15 என பவுனுக்கு ரூ.120 அதிகரித்தது. இதனால், ஒரு கிராம் ரூ.5,875-க்கும், ஒரு பவுன்ரூ.47,000-க்கும் விற்பனையானது. இதன்மூலம், 6 மாதங்களுக்கு பிறகு, ஒரு பவுன் தங்கம் விலை மீண்டும் ரூ.47 ஆயிரத்தை எட்டியுள்ளது. நேற்று 24 காரட் சுத்த தங்கம் ஒரு கிராம் ரூ.6,345-க்கும், ஒரு பவுன் ரூ.50,760-க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.6,330, ஒரு பவுன் ரூ.50,640 என விற்பனையானது.
அதேநேரம், வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.81, ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.81,000 என விற்கப்பட்ட நிலையில், நேற்று ஒரு கிராம் ரூ.80.50, ஒரு கிலோ ரூ.80,500 என விற்பனையானது.
» மக்களவை தேர்தலுக்கான மாநில பொறுப்பாளர்களை நியமித்தது காங்கிரஸ்: பிரியங்கா காந்தி விடுவிப்பு
» தனியார் மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து: பெரும் உயிர்ச் சேதம் தவிர்ப்பு @ ஹைதராபாத்
தை மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சி வைத்திருப்பவர்கள் இப்போதிருந்தே நகை வாங்க திட்டமிட்டு வருகின்றனர். தங்கம் விலை ஏறுமுகத்தில் இருப்பது நகை வாங்குவோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
3 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago