சிறு, குறு, நடுத்தர தொழில் மூலமான வேலைகளில் தமிழகத்துக்கு 2-ம் இடம்: மத்திய அரசு தகவல்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: சிறு குறு நடுத்தர தொழில்துறை (எம்எஸ்எம்இ) மூலம் உருவான வேலைகளின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்த தகவல், திமுக எம்பி டி.ரவிக்குமார் எழுப்பிய வினாவுக்கு அத்துறையின் மத்திய இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா அளித்த பதிலில் வெளியாகி உள்ளது.

இது குறித்து மக்களவையில் விழுப்புரம் தொகுதி எம்பியான டி.ரவிகுமார் எழுப்பிய கேள்வியில், "இசிஎல்ஜி திட்டத்துக்கு எவ்வளவு தொகை பயன்படுத்தப்பட்டது? நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபியில் எம்எஸ்எம்இயின் பங்கு என்ன? அந்தத் துறை மூலம் உருவாக்கப்பட்ட வேலைகளின் எண்ணிக்கையை மாநிலவாரியாகத் தருக" எனக் கேட்டிருந்தார். இதற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையின் இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா இன்று எழுத்துபூர்வமாக அளித்த பதில் பின்வருமாறு:

கோவிட் - 19 தொற்றுநோயால் ஏற்பட்ட பாதிப்புகளின் பின்னணியில், எம்எஸ்எம்இகளுக்கு ஆதரவாக ஆத்மநிர்பரின் ஒரு பகுதியாக எமர்ஜென்சி கிரெடிட் லைன் கியாரண்டி திட்டம் (இசிஎல்ஜிஎஸ்) மே, 2020 இல் தொடங்கப்பட்டது.

மார்ச் 31,2023 வரை இசிஎல்ஜிஎஸ் திட்டம் செயல்பாட்டில் இருந்தது. நிதிச் சேவைத் துறையின் அறிக்கையின்படி, இசிஎல்ஜிஎஸ் கீழ் ரூ. 3.68 லட்சம் மதிப்பிலான 1.19 கோடி உத்தரவாதங்கள் கோடி சிறு குறு நடுத்தர தொழில்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட சமீபத்திய தகவலின்படி, 2021-22 ஆம் ஆண்டில் அகில இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) எம்எஸ்எம்இயின் மொத்த மதிப்பு கூட்டப்பட்ட பங்கு சுமார் 29 சதவிகிதம் ஆகும். எனத் தெரிவித்தார்.

‘உதயம் போர்ட்டல், உதயம் அசிஸ்ட் இணையதளம்’ ஆகியவற்றில் எம்எஸ்எம்இ துறையில் மாநிலவாரியாக எவ்வளவு வேலைகள் உருவாக்கப்பட்டன என்ற பட்டியல் பதிவாகி உள்ளது. இந்த தகவலின்படி ஜுலை 1, 2020 முதல் டிசம்பர் 15, 2023 வரையிலான கடந்த சுமார் மூன்றரை ஆண்டுகளில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிராவில் 1,82,42,677 வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 1,68,21,206 வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 2,29,719 வேலைகளும், தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலமாகக் கூறப்படும் குஜராத்தில் 94,91,616 வேலைகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

4 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்