தமிழ்நாட்டை பின்னுக்குத் தள்ளி 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக உருவெடுத்த உ.பி.

By செய்திப்பிரிவு

லக்னோ: உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) பங்களிப்பு அடிப்படையில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும் தமிழ்நாடு 2-வது இடத்திலும் இருந்து வந்தன. உத்தர பிரதேசம் 5-வது இடத்தில் இருந்தது.

இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டை பின்னுக்குத் தள்ளி உத்தர பிரதேசம் 2-வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. முதலீடு மற்றும் பங்குச் சந்தை தொடர்பான போக்குகளை கண்காணித்து வரும் soic.in ஜிடிபி பங்களிப்பு அடிப்படையில் இந்திய மாநிலங்களை பட்டியலிட்டுள்ளது. அதன்படி, 15.7% ஜிடிபி பங்களிப்பைக் கொண்டு மகாராஷ்டிரா முதல் இடத்திலும் 9.2% பங்களிப்பைக் கொண்டு உத்தர பிரதேசம் 2-வது இடத்திலும் உள்ளன. தமிழ்நாடு (9.1%), குஜராத் (8.2%), மேற்கு வங்கம் (7.5%) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், 2027-ம் ஆண்டுக்குள் அம்மாநில பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலராக மாற்ற இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார்.

முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தொழில் கொள்கையில் பல்வேறு தளர்வுகளை கொண்டுவந்தபடி உள்ளார். இந்நிலையில், தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் 14-வது இடத்திலிருந்த உத்தர பிரதேசம் தற்போது 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக அம்மாநில அரசு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் உத்தர பிரதேசத்தில் உலக முதலீட்டாளர் உச்சி மாநாடு நடைபெற்றது. இதன் மூலம், அம்மாநிலத்தில் ரூ.40 லட்சம் கோடி முதலீடு வரவுள்ளதாகவும், அதன் வழியே 1 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

18 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

20 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்