உலகளாவிய சவால்களுக்கு இடையே இந்திய பொருளாதார வளர்ச்சி அபாரம்: சர்வதேச நிதியம் பாராட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘‘உலகளாவிய சவால்களுக்கு இடையே, இந்தியாவின் பொருளாதாரம் அபார வளர்ச்சியை எட்டியுள்ளது’’ என சர்வதேச நிதியம் பாராட்டு தெரிவித்துள்து. சர்வதேச நிதியத்தின் நிர்வாகவாரிய இயக்குநர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த ஓராண்டில் இந்தியாவின் பொருளா தார வளர்ச்சி அபாரமாக உள்ளது. அமைப்பு சாரா தொழில் துறையில் வேலைவாய்ப்பு நிலவரம்கரோனோவுக்கு முந்தைய நிலையிலிருந்து மீண்டுள்ளது. உலகளவில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் நிதித்துறை செயல்பாடுகள் வலுவாக உள்ளன. கரோனா மற்றும் சர்வதேச பிரச்சினைகளால், 2022-23-ம் நிதியாண்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்தாலும், இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதி மற்றும் கச்சா எண்ணெயை ரஷ்யாவிலிருந்து குறைந்த விலைக்கு இறக்குமதி செய்வதில் பின்பற்றிய யுக்திகள் ஆகியவை நிலைத் தன்மையை வழங்கியது.

இதன் காரணமாக 2023-24-ம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1.8% மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கான வளர்ச்சி தொடர்ந்து அதிகரிக்கும், 2023-24 மற்றும் 2024-25-ம் நிதியாண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.3 சதவீதமாக இருக்கும். விரிவான சீர்திருத்தங்கள் மூலமாக, வளர்ச் சியை தக்க வைக்க அடிப்படை டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மற்றும் வலுவான அரசு திட்டங்கள் தயாராக உள்ளன.

இந்தியாவின் மிகப் பெரியளவிலான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர் திருத்தங்கள், உலகளாவிய சவால்களுக்கு இடையிலும் நாட்டின் பொருளாதாரத்தை வலுவாக வைத்துள்ளன. பொருளாதார நிலைத்தன்மையை தக்கவைக்க, தகுந்த கொள்கைகள் தொடர்ந்து தேவை. இந்தியாவின் குறிப்பிடத்தக்க ஆற்றலை வெளிப் படுத்த அமைப்பு சீர்த்திருத்தங்கள் ஊக்குவிக் கப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE