ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்தின் 50.5% பங்குகளை கைப்பற்றியது அதானி குழுமம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்தின் 505% பங்குகளை அதானி குழுமம் கைப்பற்றி உள்ளது.

அதானி குழுமத்தின் ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊடக துறையில் கால்பதித்தது. குறிப்பாக வர்த்தகம் மற்றும் நிதி தொடர்பான செய்தி இணையதளமான க்வின் டில்லியன் பிசினஸ் மீடியா நிறுவ னத்தை அதானி குழுமம் வாங்கியது. அதே ஆண்டு டிசம்பர் மாதம் ஆங்கில செய்தி தொலைக்காட்சியான என்டிடிவியின் 65% பங்குகளை வாங்கியது. இந்நிலையில், ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்தின் 50.5% பங்கு களை அதானி குழுமம் கைப்பற்றி உள்ளது.

இதுகுறித்து அதானி குழுமம் வெளியிட்ட அறிக்கையில், "ஐஏஎன்எஸ் இந்தியா செய்தி நிறுவனத்தின் 50.5% பங்குகளை எங்கள் ஏஎம்ஜி மீடியா வாங்கி உள்ளது. இதற்கு அந்த நிறுவ வத்தின் வாரியக் குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்த நிறுவனத்தை நிர்வகிக்கும் அதிகாரம் மற்றும் அனைத்து இயக்குநர்களை நியமிக்கும் அதிகாரம் ஆகியவை ஏஎம்ஜி மீடியா வசமாகி உள்ளது. மேலும் ஐஏஎன்எஸ் ஏஎம்ஜி மீடியாவின் துணை நிறுவனமாகி உள்ளது" என கூறப்பட்டுள்ளது. எனினும் நிறுவனம் எவ்வளவு தொகைக்கு கைமாறியது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. கடந்த 2022-23 நிதியாண்டில் ஐஏஎன்எஸ் நிறுவனம் ரூ.11.86 கோடி வருவாய் ஈட்டி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

4 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்