‘மாருதி 800’ அறிமுகமாகி 40 ஆண்டு நிறைவு: இந்திரா, ராஜீவுக்கு ஜெய்ராம் ரமேஷ் பாராட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 1983-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி ‘மாருதி 800’ கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. மக்கள் மத்தியில் அந்தக் கார் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளது. இதனால், அது ‘மக்கள் கார்’ என்று அழைக்கப்படுகிறது.

‘மாருதி 800’ கார் அறிமுகமாகி 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அது தொடர்பாக, முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில், “40 ஆண்டுகள் கழித்து இன்று மாருதி சுசூகி காரை நினைவுகூர்ந்து கொண்டாடுகிறோம். இந்தியாவில் மிகுந்த தாக்கம் செலுத்திய வாகனம் அது. மக்களின் நுகர்வு கலாச்சாரம் மாறத் தொடங்கிய காலகட்டம் அது. தொழில்துறையும் பெரும் மாற்றத்துக்கு உள்ளானது. ‘மாருதி 800’ அறிமுகத்தில் முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. மாருதி - சுசூகி இணைப்பு நிறுவனத்தை சாத்தியப்படுத்திய வி. கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஓ சுசூகியை இந்தத் தருணத்தில் நாம் நினைவுகூர்வது அவசியம்” என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE