பங்குச் சந்தையில் 3-வது நாளாக விறுவிறுப்பு: புதிய உச்சத்தில் சென்செக்ஸ்

By செய்திப்பிரிவு

மும்பை: பங்குச் சந்தையில் தொடர்ந்து 3-வதுநாளாக நேற்றும் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இதையடுத்து, சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டது. நிஃப்டி 21,000 புள்ளிகளை நெருங்கியது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக் குறைவு,சாதகமான உள்நாட்டு பொருளாதார புள்ளிவிவரம், அந்நிய முதலீடு அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக இந்தியப் பங்குச் சந்தை ஏற்றம் கண்டு வருகிறது.

அண்மையில் வெளியான தேர்தல்முடிவுகளும் முதலீட்டாளர்களிடம் நாட்டின் வளர்ச்சி குறித்த நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அதன் காரணமாகவே பங்குச்சந்தையில் தொடர் எழுச்சி காணப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை உள்நாட்டுமுதலீட்டாளர்கள் ரூ.1,399 கோடிக்கு பங்குகளை விற்ற நிலையில், அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.5,224 கோடி மதிப் பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.

அதானி நிறுவனப் பங்குகள் நேற்றைய வர்த்தகத்திலும் அதிக விலைக்கு கைமாறின. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 350புள்ளிகள் (0.52%) அதிகரித்து 69,653.73 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி 82 புள்ளிகள் (0.40%) உயர்ந்து 20,937.70 புள்ளிகளில் நிலைபெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE