புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.47,320-க்கு விற்பனை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று (டிச.2) சவரனுக்கு ரூ.520 அதிகரித்து, ரூ.47,320-க்கு விற்பனையாகி, புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வந்தது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (சனிக்கிழமை) கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,915-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.47,320-க்கு விற்பனையாகிறது. இதன்மூலம் தங்கம் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. 24 காரட் சுத்த தங்கம் ரூ.51,080-க்கு விற்பனையாகிறது.

இதேபோல், ஒரு கிராம் வெள்ளி விலை இன்று ரூ.1.00 அதிகரித்து ஒரு கிராம் ரூ.83.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.83,500 ஆக இருக்கிறது.

கடந்த 2022 டிச.26-ம் தேதி ஒரு பவுன் விலை ரூ.43,040 ஆக அதிகரித்தது. பின்னர், இந்த ஆண்டு ஜன.27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ரூ.42,700 முதல் ரூ.42,800 வரை விற்பனையானது. பிப்.2-ம் தேதி ரூ.44,040, மார்ச் 5-ம் தேதி ரூ.45,520, மே 3-ம் தேதி ரூ.45,648 எனத் தொடர்ந்து அதிகரித்தது. ஜூன் 4-ம் தேதி ரூ.46,000 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது.

சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதே விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்றும், அத்துடன், உள்நாட்டிலும் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. எனவே, இன்னும் ஓரிரு மாதங்களுக்கு தங்கம் விலை அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 hours ago

வணிகம்

8 hours ago

வணிகம்

9 hours ago

வணிகம்

10 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்