உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி காரணமாக சென்னையில் போதிய பயணிகள் இல்லாததால் 6 விமான சேவைகள் ரத்து

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் 6 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள உலகிலேயே பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்ற இறுதிப் போட்டியை வீடுகளில் இருந்து டிவிகளில் பார்க்கும் ஆர்வத்தில் பெரும்பாலானோர் நேற்று வெளியூர் பயணத்தை தவிர்த்தனர். அதனால், நேற்றுவிமானங்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது.

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் இருந்து இன்று காலை 9.25 மணிக்கு திருச்சி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 10 மணிக்கு பெங்களூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 3.30 மணிக்கு திருச்சி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 3 புறப்பாடு விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.

அதேபோல், காலை 8.05 மணிக்கு பெங்களூரில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், பகல் 12 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 6 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 3 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE