தமிழக தொழில்முனைவோருக்காக நவ.17-ல் கோவையில் தொழில்நுட்ப ஜவுளித் துறை மாநாடு

By செய்திப்பிரிவு

சேலம்: தமிழகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர்கள், தொழில்நுட்ப ஜவுளித் துறையிலும் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக, கோவையில் வரும் 17-ம் தேதி தொழில்நுட்ப ஜவுளித்துறை மாநில மாநாடு நடத்தப்படுகிறது என்று தமிழக அரசின் துணி நூல் துறை ஆணையர் வள்ளலார் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் துணிநூல் துறை, இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் தொழில்நுட்ப ஜவுளித்துறை சார்ந்த 2-வது மாநில மாநாடு கோவையில் வரும் 17 மற்றும் 18-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான விழிப்புணர்வு கூட்டம் சேலத்தில் நேற்று நடைபெற்றது. தமிழக அரசின் துணிநூல் துறை ஆணையர் வள்ளலார் தலைமை வகித்தார். இந்திய தொழில் கூட்டமைப்பு சேலம் மண்டல துணைத் தலைவர் அசோக்குமார், இணை ஒருங்கிணைப்பாளர்கள் வேல் கிருஷ்ணா, மகேந்திரகுமார் சர்மா மற்றும் தொழில் முனைவோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழக அரசின் துணிநூல் துறை ஆணையர் வள்ளலார் பேசியது: செயற்கை நூலிழை ஜவுளி உற்பத்தியில், தமிழகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர் பயனடையும் வகையில், கோவையில் தொழில்நுட்ப ஜவுளித்துறை மாநாடு கோவையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், வெளிநாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்க உள்ளனர்.

மாநாட்டின்போது, புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள், தொழில் நுட்ப உதவி, மத்திய, மாநில அரசுகளின் உதவிகள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. சிறு தொழில்முனைவோர் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில், தமிழக அரசின் சார்பில் மினி ஜவுளிப் பூங்கா திட்டம் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 15 இடங்களில் மினி ஜவுளிப் பூங்கா தொடங்கப் பட்டுள்ளது.

தலா ரூ.5 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டும் மினி ஜவுளிப் பூங்காவுக்கு, தமிழக அரசின் சார்பில் ரூ.2.5 கோடி மானியம் வழங்கப்படுகிறது. 50 சதவீதம் அளவுக்கு அரசு மானியம் வழங்கி வருவதால் தொழில்முனைவோர் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் விரைவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மினி ஜவுளிப் பூங்காக்கள் தொடங்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

தொழில் நுட்ப ஜவுளிப் பூங்கா, மருத்துவத் துறை சார்ந்த ஜவுளிப் பூங்கா, பாதுகாப்புத் துறை சார்ந்த ஜவுளிப் பூங்காக்கள் தொடங்கலாம். தொழில் நுட்ப ஜவுளித் துறையிலும் தமிழகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக மாநாடு நடத்தப்பட உள்ளது .

தொழில் நுட்ப ஜவுளித்துறை சார்பில் விளையாட்டு வீரர்களுக்கான உடைகள், பாதுகாப்புத் துறைக்கான புல்லட் புரூஃப் உடைகள், மருத்துவ துறையில் அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தும் ஆடைகள், கார்களில் பயன்படுத்தக் கூடிய துணிகள், விவசாயத் துறையில் பசுமை இல்லம் அமைப்பதற்கான துணிகள், வீடுகள் கட்டுமானத்தில் பயன்படும் துணிகள் போன்றவற்றுக்கு வெளி நாடுகளில் அதிக வணிக வாய்ப்புகள் உள்ளன, என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

28 mins ago

வணிகம்

43 mins ago

வணிகம்

1 hour ago

வணிகம்

3 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்