ராணுவ தளவாட துறையில் 100% அந்நிய முதலீடு: சுவீடன் நிறுவனத்துக்கு அனுமதி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் ராணுவ தளவாட உற்பத்தித் துறையில் 74 சதவீத அந்நிய முதலீடுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது.

2015-ம் ஆண்டு முதல் சில முக்கியமான தயாரிப்புகளுக்கு மட்டும் 100% அந்நிய முதலீடுக்கு ஒப்புதல் வழங்க முடிவு செய்யப்பட்டது. எனினும், இதுவரையில் எந்த வெளிநாட்டு நிறுவனத்துக்கும் 100% முதலீட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதில்லை. இந்நிலையில் முதன்முறையாக சுவீடனை சேர்ந்த ‘சாப்’ (Saab) நிறுவனத்துக்கு 100% அந்நிய முதலீட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ‘சாப்’ நிறுவனம் ஹரியாணாவில் ரூ.500 கோடி முதலீட்டில் ஆலையை நிறுவ உள்ளது. இதில் ராக்கெட் லாஞ்சர்கள் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது. இந்தியாவில் 100% முதலீடு மேற்கொள்ள அனுமதி கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று சாப் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் மாட் பால்ம்பெர்க் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

4 hours ago

வணிகம்

7 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்