தீபாவளிக்காக லலிதா ஜுவல்லரியின் புதிய விளம்பரம் வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: லலிதா ஜுவல்லரி நிறுவனம் ‘லட்சுமி கடாட்ச தீபாவளி’ எனும் கலாச்சாரத்தை எதிரொலிக்கும் தீபாவளி விளம்பரம் மூலம் தனது வாடிக்கையாளர்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது.

லலிதா ஜுவல்லரி நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கிரண்குமார் கூறும்போது, “தீபாவளிப் பண்டிகையின்போது தங்கம் வாங்குவது எல்லோராலும் விரும்பப்படுகிறது. இது ஒரு செழிப்பான மற்றும் மகிழ்ச்சியான ஆண்டுக்கான ஆசீர்வாதத்தைக் குறிக்கிறது” என்றார்.

தீபாவளிக்கான லலிதாவின் சமீபத்திய தொலைக்காட்சி விளம்பரம் இந்த உணர்வுகளை அழகாகப் படம்பிடித்துள்ளது.

இதில் மக்கள் ஒன்று கூடுவதும், லட்சுமி தேவியை வழிபடுவதும், விளக்கு ஏற்றுவதும், பரிசுகளை பரிமாறுவதும் காட்டப்பட்டுள்ளது. தீபாவளியின் உண்மையான கருத்து, மக்களிடையே பகிர்ந்துகொள்ளப்படும் அன்பு மற்றும் பக்தியில் உள்ளது என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

இத்தொலைக்காட்சி விளம்பரத்தின் மூலம், லலிதாவில் தங்கம் வாங்குவது என்பது நகைகளை வாங்குவது மட்டுமல்ல, பாரம்பரியத்தைத் தொடர்வதும், நேசத்துக்குரிய மதிப்புகளைப் பேணுவதும், தெய்வீக ஆசீர்வாதங்களைத் தழுவுவதும் ஆகும் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறது.

தீபாவளி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, லலிதா ஜுவல்லரி, அனைத்து தங்க நகைகளுக்கும் மார்க்கெட்டிலேயே குறைந்த தனது சேதாரத்தில் மேலும் ஒரு சதவீதம் குறைத்துள்ளது. எல்லா வைர நகைகளுக்கும், தனது காரட் விலையில் மேலும் ரூ.5 ஆயிரம் குறைத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE